‘ஜீவா’ படத்தில் ஸ்ரீதிவ்யா தங்கையாக வந்தா பொண்ணா இது ? ப்பா, எப்படி ஆகிட்டாங்க பாருங்க

0
899
jeeva
- Advertisement -

சினிமாவில் துணை நடிகர்களாக நடித்த ஒரு சில நடிகைகள் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் நடித்த இவரை ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான். தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜீவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி போன்ற பலர் நடித்திருந்த இந்தப் படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக மோனிகா என்பவர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த மோனிகா சென்னையை சேர்ந்தவன் தான். 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் பட வாய்ப்புகளை தேடி அலைந்தார். அப்போது ஆடிசன் மூலம் ஜீவா படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் பகடையாட்டம், ஜீனியஸ், ஏஞ்சலினா போன்ற பல படங்களில் நடித்து வந்தார் தீபா.

இதையும் பாருங்க : ’11 மாதம் கழித்து என் தந்தை மீண்டும் வந்துவிட்டார்’ – மகன் பிறந்ததை குயூட் புகைப்படத்துடன் அறிவித்த ஆரவ்

- Advertisement -

திரைப்படத்தில் மிகவும் சிறிய பெண்ணாக இருந்த இவர் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துவிட்டார். சமீபத்தில் இவரது லேட்டஸ்ட் திரைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் ஜீவா படத்தில் வந்த சின்ன பொண்ணா இது என்று அடையாளம் தெரியாத வண்ணம் இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க தற்போது நடிகை மோனிகா ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் மோனிகா. மோனிகா தற்போது ‘தோழர் வெங்கடேசன்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மஹாசிவன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷங்கர் என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார். கலா பிலிம்ஸ் லிமிடெட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement