சமந்தா சொல்வது தவறு, திட்டி விளாசும் விஷ்ணு விஷாலின் மனைவி- காரணம் இது தான்

0
265
- Advertisement -

நடிகை சமந்தாவை விஷ்ணு விஷாலின் மனைவி திட்டி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. தற்போது சோசியல் மீடியாவில் இவரின் மருத்துவம் தொடர்பான பதிவு தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சமந்தா அவர்கள் மூக்கில் நெபுலைசர் கருவியை வைத்தவாறு புகைப்படத்தை பதிவிட்டு, பொதுவாக வைரல் தொற்றுக்கு மருந்து கொள்ளும் முன் ஒரு மாற்று வழியை முயற்சித்து பாருங்கள்.

-விளம்பரம்-

அதில் ஒரு வழி தான் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவை மூலம் நெபுலைஸ் செய்வது என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் போட்டிருக்கும் பதிவு சர்ச்சைக்கு காரணம். இதற்கு பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் லிவர் டாக் என்ற மருத்துவர் சமந்தாவின் கருத்தை கண்டித்து பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், சுவாச வைரஸ் தொற்றுகளை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடு சுவாசிக்க வேண்டும் என்று சமந்தா கூறி இருக்கிறார்.

- Advertisement -

சமந்தா பதிவு சர்ச்சை:

அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடு எடுக்க வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறது. காரணம், அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஒன்று. பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியாக இருக்கும் ஒரு முற்போக்கான காலத்தில் சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சமந்தா கூறியிருக்கிறார். இவருக்கு அபதாரம் அல்லது சிறை தண்டனை கொடுக்க வேண்டும். மருத்துவம் தொடர்பாக அவருக்கு சிறந்த ஆலோசகர் தேவை என்று கூறி இருக்கிறார்.

நெட்டிசன்கள் கருத்து:

இதை அடுத்து மருத்துவர்கள் சிலர் சமந்தாவின் கருத்துக்கு எதிராக கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நெட்டிசன்கள், சரியான டாக்டர் குழுவிடம் சமந்தா அறிவுரை கேட்க வேண்டும். எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்றெல்லாம் அவரை திட்டி வருகிறார்கள் இந்நிலையில் இதற்கு நடிகர் விஷ்ணு விஷ்ணுவின் மனைவி ஜுவாலா கட்டா பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், நடிகை சமந்தா சொன்ன ஐடியா ரொம்ப ஆபத்தான ஒன்று.

-விளம்பரம்-

ஜுவாலா கட்டா பதிவு:

யாரும் அதை பயன்படுத்த வேண்டாம் என்று போட்டிருக்கிறார். இப்படி பாலரும் சமந்தாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் செய்தி தான் காட்டுத்தீயாய் பரவி இருக்கிறது. பின் இது தொடர்பாக சமந்தா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர், எனக்கு இந்த சிகிச்சை பலன் அளித்தது. இதனால் நான் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் தான் பரிந்துரைத்தேன். இதில் பணம் சம்பாதிப்பது போன்ற எந்த ஒரு தவறான நோக்கத்திலும் சொல்லவில்லை. நான் முயற்சித்து பார்க்காமல் அந்த சிகிச்சையை யாருக்கும் சொல்லவில்லை. நிபுணர்களின் அறிவுறுத்தல் படி அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டேன்.

சமந்தா விளக்கம்:

இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் அதிக விலை கொண்டது. அனுபவம் இல்லாமல் போற போக்கில் நான் எந்த சிகிச்சையும் சொல்லவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் கற்றுக் கொண்டதன் அடிப்படையிலும் நல்ல நோக்கத்திற்காகவும் தான் நான் இதை பரிந்துரைத்தேன். என்னுடைய பதிவை தாக்கியும், என்னுடைய நோக்கத்தை தவறாக புரிந்து கொண்டும் சில கருத்துக்கள் வருவதை அறிந்தேன். மருத்துவர்கள் என்னை விட அதிகமாக அறிந்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் கிடையாது. அவருடைய கருத்து நல்ல நோக்கத்திற்கான என்பதையும் அறிவேன். நான் பிரபலமாக இருப்பதால் இப்படியான கருத்துக்கள் வருகிறது என்று நினைக்கிறேன். சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பயன்படும் வகையில் தான் அந்த பதிவை வெளியிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement