தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் முண்டாசுப்பட்டி, வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஷ்ணு.
இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் விஷ்ணுவிஷால் சோசியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார். சமீப காலமாகவே நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த ராட்சசன் படத்தை தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கும் காடன், ஜெகஜால கில்லாடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : நடிகை லைலாவிற்கு தோலுக்கு மேல் வளர்ந்து இரண்டு மகன்கள் இருக்கிறார்களா. புகைப்படம் இதோ.
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்கும் ஆர்யன் என்ற ஒரு மகனும் உள்ளனர். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும், இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்று உள்ளார்.
இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் நடிகை அமாலபாலை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின. ஆனால், அது எல்லாம் உண்மை இல்லை, வதந்தி என்று மறுத்தார் நடிகர் விஷ்ணு விஷால். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து விஷ்ணு விஷால் இடம் பேட்டி எடுத்த போது அவர் கூறியது, நானும் ஜுவாலாவும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதால் அவ்வப்போது சந்தித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டு. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத் தான் பழகி வருகிறோம். எனக்கு கல்யாணம் என்ற வார்த்தையை கேட்டாலே இப்போது ரொம்ப பயமாக இருக்கிறது.
எனது யோசனை எல்லாம் என்னுடைய சினிமா கேரியரை பற்றி தான் இருக்கிறது. திருமணத்தை பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விட அந்த புகைப்படங்களை பார்த்தால் இவர்கள் காதலை வெளிப்படுத்துவது போன்று உள்ளது என்றும் பல விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.