கல்யாணமான ஒரே மாதத்தில் டைவர்ஸ் – தற்போது புதிய காரை வாங்கிவிட்டு சம்யுக்தா போட்ட ஆவேச பதிவு.

0
1939
Samyuktha
- Advertisement -

சில வாரங்களுக்கு முன்னர் யூடுயூபில் பெரிய பஞ்சாய்த்தாக சென்று கொண்டு இருந்தது விஷ்ணுகாந்த் – சம்யுக்தா விவகாரம் தான். இந்த நிலையில் இவர்களது பஞ்சாயத்தில் புதிததாக சிக்கி இருப்பவர் vj ரவி. சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், திருமணம் ஆன 15 நாட்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. திருமணத்திற்கு பின்னர் சம்யுக்தா தன் நண்பர்களுடன் பேசி வந்ததால் தான் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விஷ்ணுகாந்த் பேட்டி அளித்து இருந்தார்.

- Advertisement -

ஆதாரங்களை வெளியிட்ட விஷ்ணுகாந்த் :

அதில் அவர் சம்யுக்தா குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆனால், விஷ்ணு சொல்வது எல்லாம் பொய் என்று சம்யுக்தா கூறி இருந்தார். அதோடு அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் முக்கியம் என்றும் கூறி இருந்தார்.இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை சம்யுக்தா, ரவி என்பவரை காதலித்து இருக்கிறார்.

Samyuktha

எல்லை மீறிய ரவி :

ரவி வேறு யாரும் கிடையாது சம்யுக்தாவுடன் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் நடித்தவர்கள் தான். உண்மையாகவே இவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் சமித்தாவிடம் ரவி எல்லை மீறி இருக்கிறார். இதனால் தங்கள் இருவருக்கும் பொதுவான நபர்களிடம் ரவி குறித்து தெரிவித்து இருக்கிறார் சம்யுக்தா. ஆனால், சம்யுக்தா தன் பெயரை கெடுக்க இப்படி எல்லாம் செய்கிறார் என்று ரவி தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி இவர்களின் பஞ்சாயத்து பூதாகரமாக வெடித்து தற்போது அடங்கிய நிலையில் சமீபத்தில் சம்யுக்தா புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் சுதந்திரமான கடின உழைப்பாளி பெண்ணால் முடியாதது எதுவுமில்லை. ஆம் ஒப்புக்கொள்கிறேன்… ஒரு பெண் இந்த சமூகத்தில் உண்மையான இதயத்துடனும் தூய்மையான நோக்கத்துடனும் வாழ்வது மிகவும் சவாலானது. நாம் என்ன செய்தாலும்.., நிச்சயம் சிலர் நம்மை அவதூறாகப் பேசுவார்கள்.

அவர்களின் கேவலமான பேச்சுக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாய்கள் குரைக்கட்டும். யாரிடமும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எவ்வளவு அழுக்கு உள்ளம் கொண்டவர்கள் என்பது அவர்களுக்கே தெரியும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஒரே மாதிரியான கொள்கைகளை உடைக்கவும். சுதந்திரத்தைத் தேர்ந்தெடுங்கள்.

உங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்குங்கள். உங்களை முன்னுரிமையாக்குங்கள். அந்த ஆண் பேரினவாத கேடுகெட்டவர்களுக்கு முன்னால் ஒரு முதலாளி பெண்ணாக இருங்கள். அவர்கள் தவறு என்று நிரூபிக்கவும். உங்கள் வெற்றி அவர்களுக்கு செருப்பாக இருக்கட்டும். அங்குள்ள ஒவ்வொரு சுதந்திரமான கடின உழைப்பாளி பெண்களுக்கும் நிறைய சக்தி மற்றும் நேர்மறை அதிர்வுகளை அனுப்புகிறது. தைரியமாக இருங்கள், வலுவாக இருங்கள் மற்றும் உங்கள் சாதனைகள் பேசட்டும்

Advertisement