பாலா தயாரிப்பில் Rk சுரேஷ் நடித்துள்ள ‘விசித்திரன்’ எப்படி இருக்கிறது – முழு விமர்சனம்.

0
275
visithiran
- Advertisement -

இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் விசித்திரன். இந்த படம் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜோசஃப் படத்தின் தமிழ் ரீமேக். மலையாளத்தில் ஜோசப் படத்தை இயக்கிய இயக்குனர் பத்மகுமார் தான் தமிழில் விசித்திரன் படத்தை இயக்கியிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இதில் பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்து இருக்கின்றனர். ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. மேலும், இன்று வெளியாகியுள்ள விசித்திரன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

படத்தின் மொத்த கதை பொள்ளாச்சி மாவட்டம் வால்பாறையில் நடக்குமாறு உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் போலீஸ்(கான்ஸ்டபிள்) அதிகாரியாக இருந்து தாமாகவே பணி ஓய்வு பெற்று வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய மனைவியாக மலையாள நடிகை ஷாம்னா காசிம் நடித்திருக்கிறார். ஒரு நாள் சுரேஷ் தன் முன்னாள் காதலி திடீர் மரணம் அடைய அதை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருக்கிறார். இதனால் ஹீரோ தனது மனைவியுடன் சற்று விலகி இருக்க நினைக்கிறார்,. இதனால் அவரது மனைவி அவரை விவாகரத்து செய்து விடுகிறார்.

பின் சுரேஷ் தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், இவரின் மகளும் விபத்தில் இறந்துவிடுகிறார். இந்த விரக்தியில் சுரேஷ் தனியாக வாழ்ந்து வருகிறார். பின் ஒரு நாள் சுரேஷின் மனைவிக்கு திடீரென்று மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து விடுகிறார். பின் மருத்துவமனைக்கு நிர்வாகம் உடல் உறுப்புகளை தானம் செய்து விடுகின்றன. இதை சுரேஷ் விபத்தல்ல, நடந்தது திட்டமிட்ட கொலை என்று சந்தேகம் படுகிறார். இதனையடுத்து சுரேஷ் விசாரணையில் இறங்கினார். அப்போது திடுக்கிடும் மெடிக்கல் மாபியா குறித்து ஹீரோவுக்கு தெரிய வைக்கிறது

-விளம்பரம்-

இறுதியில் ஒரு சாதாரண கான்ஸ்டபிள் ஒரு பெரிய மெடிக்கல் மாஃபியாமாவை எப்படி மக்களுக்கு அம்பலப்படுத்துகிறார்? அதனால் என்னென்ன விளைவுகளை சந்திக்கிறார்? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் ஆர்கே சுரேஷ் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. அந்த கதாபாத்திரத்தை அழகாக தாங்கி சென்றிருக்கிறார். அதேபோல் தற்போது மிகப்பெரிய வணிகம் என்றால் மருத்துவம். இதை சுற்றியே நடக்கும் பிரச்சனைகளையும், அநீதிகளையும் அழகாக காண்பித்திருக்கிறார்கள். இதுவரை திரையில் பார்க்காத ஆர்கே சுரேஷ் இதில் பார்க்க முடிகிறது.

இந்தப் படம் மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்தது. அதே இயக்குனர் தமிழில் மீண்டும் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் காவல்துறை அதிகாரி கொலையாளிகளை எப்படி புலனாய்வு செய்து கண்டு பிடிக்கிறார்? என்பதை தத்ரூபமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். படத்தில் பிரகாஷின் இசை கூடுதல் பலமாக உள்ளது. ஆனால், பாடல்கள் சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

மலையாளத்தில் வெளிவந்த ஜோசப் படம் போல தமிழில் விசித்திரன் படம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது. ஏனென்றால், ஜோசப் படம் விறுவிறுப்பாக சென்றது. ஆனால், தமிழில் கொஞ்சம் பொறுமையாக நகர்கிற மாதிரி இருக்கிறது. பொதுவாகவே ரீமேக் படங்கள் சுமாராக தான் இருக்கும் என்ற எண்ணத்தை விசித்திரன் படம் உடைத்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஒரு உண்மை கதை என்பதாலும், மலையாள சினிமாவின் ரீமேக் என்பதாலும் புதிதாக எந்த ஒரு முயற்சியும் செய்ய வாய்ப்பு குறைவு. டீவ்ஸ்ட்,திரில்லர் பாணியில் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல ட்ரீட்.

நிறைகள் :

ஆர்கே சுரேஷ் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.

மருத்துவ மாபியா குரூப்பை குறித்து இயக்குனர் அழகாக காண்பித்திருக்கிறார்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

த்ரில்லர் பாபணியில் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் நல்ல விருந்தாக இருக்கும்.

குறைகள் :

படத்தில் பிற நடிகர்களும் நடிப்பில் கொஞ்சம் கவனம் காண்பித்து இருக்கலாம்.

மலையாள படத்தின் ரீமேக் என்பதால் கதையில் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை

இயக்குனர் உடைய மெனக்கெடலும் கொஞ்சம் குறைவுதான்.

பாடல்கள் நன்றாக இருந்ததால் ரசிகர்களை கவர்ந்திருக்கும்.

ஜோசப் படத்துடன் ஒப்பிடும்போது விசித்திரன் படம் மெதுவாகத்தான் நகர்கிறது.

மொத்தத்தில் விசித்திரன்- ஒரு நல்ல முயற்சி

Advertisement