விஸ்வாசம் படம் தனுஷ் படத்தின் காப்பியா..?

0
482
ajit

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள “விஸ்வாசம் ” படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

ajith

இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே “விஸ்வாசம் ” படத்தின் கதை என்னவென்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் “விஸ்வாசம் ” படத்தின் கதை இது தான் என்று பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான அந்த வார இதழில் வெளியான செய்தியில் , “விஸ்வாசம் ” படத்தில் நடிகர் அஜித் அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் ஒரு அஜித் மும்பையிலும் மற்றுமொரு அஜித் மதுரையிலும் இருக்கின்றனர். அண்ணன் அஜித் மும்பையில் ரவுடிசம் செய்யும் தாதாவாக இருந்து வருகிறார்.

enpt

ஒருகட்டத்தில் மதுரையில் இருகும் தம்பி அஜித், அண்ணனை பார்க்க செல்கிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் “விஸ்வாசம் ” படத்தின் கதை என்று அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதே அண்ணன் தம்பி கதை தான் தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் “எனை நோக்கி பாயும் தோட்டா” படமும் , இதில் தனுஷிற்கு அண்ணனாக நடிகர் சசிகுமார் நடிக்கிறார். இதிலும் அண்ணன், தம்பி செண்டிமெண்ட் கொண்ட கதை தான் என்றும் அந்த வார இதழில் செய்தி வெளியாகியுள்ளது.