பேட்ட,விஸ்வாசம் இரண்டு படத்திலும் நடித்த நடிகரிடம் ‘பேட்ட’ பற்றி விசாரித்த அஜித்.!

0
283
Visvasam

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக விஸ்வாசம் படம் வெளியாகிறது. அஜித் ரசிகரகளும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பெரும் விசயம் என்றால் அது விஸ்வாசம் தான். இந்த படம் ரஜினியின் பேட்ட படத்தோடு வெளியாக இருக்கிறது.  

பேட்ட படத்தின் ட்ரைலருக்கு பின்னர் வெளிவந்த விஸ்வாசம் படத்தின் ட்ரைலரில் இடம் பெற்ற சில வசனங்கள் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது என்று சமூக வலைத்தளத்தில் சில வதந்திகள் பரவியது.

ஆனால், இப்போதும் சக கலைஞர்களை நடிகர் அஜித் என்றுமே கிண்டல் செய்தது இல்லை என்பதற்கு சான்றாக இருக்கிறது இந்த சம்பவம். அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் நடித்துள்ள இராமச்சந்திரன் துரை ராஜ், ரஜினியின் ‘பேட்ட’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசுகையில், விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய இரண்டு படத்துக்கும் மோதல், டிரைலரில் இருவரும் வசனங்கள் மூலம் அஜித் சாரும் ரஜினி சாரும் மோதுகிறார்கள் என்பது எல்லாம் வெறும் பேச்சு மட்டும் தான்.

உண்மையில் விஸ்வாசம் படப்பிடிப்பின் போது கூட அஜித் என்னிடம் பேட்ட படம் எப்படி போகிறது, ரஜினி அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று எல்லாம் கேட்டார். பிரபலங்கள் எல்லோரும் ஒற்றுமையாக தான் உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.