அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வெளியாக இன்னும் சரியாக ஒரு வாரமே இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால் இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட பட ட்ரைலரை தொடர்ந்து விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் வெளியானது. விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே பேட்ட பட ட்ரைலர் சாதனையை முறியடித்து. அதோடு ட்ரெண்டிங்கிலும் இருந்து வந்தது.
இதையும் படியுங்க : தமிழக்தில் உள்ள 1000 திரையரங்குகள்.! பேட்ட மற்றும் விஸ்வாசம் எத்தனை திரையரங்கில் ரிலீஸ்.!
இதுவரை வந்த தமிழ் பட ட்ரைலர்களிலேயே 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற முதல் ட்ரைலர் என்ற பெருமையை பெற்றது பேட்ட. இந்த நிலையில் பிரபல இனையதள தகவல் பக்கமான IMDB-யில் 2019-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? என ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் விஸ்வாசம் படம் ட்ரைலர் ரிலீசுக்கு முன்னரே அதிக ஓட்டுகள் பெற்று முதலிடத்தை பிடித்திருந்தது.
ஆனால், தற்போது ஒரே இரவில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பேட்ட படத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. தற்போது IMDB இணையதள பக்கத்தில் பேட்ட படம் 82.5% ஓட்டுகளுடன் முதலிடத்தையும் விஸ்வாசம் படம் 2.7% ஓட்டுகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. விஸ்வாசம் படத்திற்க்கு அதிக வாக்குகள் விழுந்த நிலையில் எப்படி ஒரே இரவில் மூன்றாவது இடத்திற்கு சென்றது? இதில் ஏதோ பித்தலாட்டம் நடந்துள்ளது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





