அது Morph செய்யப்பட்ட வீடியோ – அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன் – அனிகா வேண்டுகோள்.

0
12845
anika
- Advertisement -

சமீபத்தில் வைரலான வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று நடிகை அனிகா விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார் .

- Advertisement -

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். சமீப காலமாக இவர் பதிவிடும் புகைப்படங்கலில் ரசிகர்கள் அனிகாவை நயன்தாராவுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.இந்நிலையில், அச்சு அசல் அனிகா போலவே இருக்கும் இளம் பெண் ஒருவர் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவியது. இதை இப்படி ஒரு நிலையில் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், இப்படியெல்லாம் நான் பண்ண மாட்டேன். அது மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் அதனை அனைவரும் நீக்குமாறும் கூறியுள்ளார் அனிகா.

-விளம்பரம்-
Advertisement