சர்கார் விடுங்க…அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விஸ்வாசம் அப்டேட் வந்துவிட்டது.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
370
Viswasam-movie

இந்த தீபாவளி தளபதி தீபாவளி என்றால் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் தல பொங்கல் என்று ரசிகர்கள் “விஸ்வாசம் ” படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இயக்குனர் சிவா இயத்தில் உறவாகி வரும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.

Ajith

படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக தல தளபதி படம் என்றாலே படம் வெளியாவதற்கு முன்பாக வெளியிட்டு உரிமைக்கு கடும் போட்டி நிலவும்.

அந்த வகையில் தமிழ், தெலுகு, மலையாளம் என்று பல்வேறு மாநிலங்களில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டி ஜி தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்தின் விநியோகிஸ்த உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஸ் 70 கோடிக்கும் அதிகமான தொகைக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

KJRStudios

இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே 47 கோடி ருபாய் வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் க்யூப் வெளியிட்டு உரிமம் மற்ற இதர விளம்பர உரிமம் மட்டும் 50 கோடி ருபாய் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.