விஸ்வாசம் படத்தின் மொத்த வசூல்.! அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

0
827
Viswasam

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியான போதும் இந்த படம் தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தது.

தமிழகத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது மற்ற மாநிலங்களிலும் இந்த படம் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படம் 200 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் உலா வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரத்தை இந்த படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், இப்படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி முதல் 130 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர்களுக்கு 70 முதல் 75 கோடி வரை லாபத்தை ஈட்டியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமே இந்த படம் குடும்ப ரசிகர்களை ஈர்த்தது தான். கிட்டத்தட்ட 600 திரையரங்குகளில் வெளியான இந்த படத்தின் படத்தின் வெளியிட்டீன் போது கடும் போட்டிகள் இருந்தாலும் படத்தின் தொடக்க வசூல் அமோகமாக அமைந்தது என்று கூறியுள்ளார். இந்த படம் அமேசான் ப்ரைமில் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement