தல ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கொண்டாட்டம்..!இன்று காலை 11 மணிக்கு..!அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
447

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தான் தற்போது அஜித் ரசிகர்களின் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. நேற்று (டிசம்பர் 30) மதியம் 1.30 மணிக்கு வெளியான படத்தின் ட்ரைலர் தற்போது வரை பட்டையை கிளப்பி வருகிறது.

விஸ்வாசத்தின் மூலம் தன்னுடைய முந்தைய சாதனையை (விவேகம் படத்தின் சாதனை) நடிகர் அஜித் முறியடித்துள்ளார். விவேகம் படத்தின் டீசர் 6.16 லட்சம் லைக்ஸ்களையும், ட்ரெய்லர் 5.13 லட்சம் லைக்ஸ்களையும் பெற்றிருந்தது.

இதையும் படியுங்க : யூடுயுபில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனை..!அடிச்சி தூக்கும் அஜித்..!

விவேகம் படத்தின் டீசர் வெளியானபோது இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையை படைத்திருந்தது. அதே போல விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தான் இதுவரை வெளிவந்த அஜித் ட்ரைலர்களிலேயே 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற முதல் ட்ரைலர் என்ற சாதனையை படைத்துள்ளது.

ரசிகர்களின் பெரும் வரவேற்பை உணர்ந்த இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தற்போது அடுத்த அப்டேடடை வெளியிட்டது. அது என்னவெனில் இன்று காலை 11 மணிக்கு விஸ்வாசம் படத்தின் லிரிகள் வீடியோவை சன் ம்யூசிக்கில் வெளியிடுகிறது.