நீங்க கிண்டல் செய்யுங்க எந்த பிரச்னையும் இல்ல.! என்ன மனுஷன்யா அஜித்.!

0
889
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இருக்கும் ரசிகர்கள் பலம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அது போல இவரை பற்றி பல்வேறு நடிகர் நடிகைகளும் பல தகவல்களை கூறியுள்ளனர்.

-விளம்பரம்-
Related image

இந்த வகையில் அஜித்தை பற்றி பிரபல காமெடி நடிகர் விவேக் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். நடிகர் விவேக் , அஜித்துடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் துறை ரீதியை தாண்டி தனிப்பட்ட முறையிலும் நல்ல நண்பர்கள் தான்.

இதையும் படியுங்க : விஜய் 63 பின்னர் பூவையருக்கு கிடைத்த அடுத்த லக்.! யார் படத்தில் தெரியுமா.! 

- Advertisement -

சமீபத்தில் நடிகர் விவேக் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அஜித்தை கலாய்ப்பது போல பல காட்சிகளில் நடித்திருப்பார் விவேக். ஆனால், விவேக் அந்த காட்சியில் நடிப்பதற்கு முன்னாள் அஜித்திடம் ’அஜித், உங்கள் ரசிகர்கள் நான் கலாய்த்தால் கோபப்படுவார்களே’ என்று கேட்டாராம்.

ஆனால், அதற்கு அஜித்தோ ‘அட நீங்கள் வேற, நீங்கள் என்னை கிண்டல் செய்தால், யாருமே கோபப்பட மாட்டார்கள், எல்லோரும் ரசிக்க தான் செய்வார்கள். பரவாயில்லை’ என்று மிகவும் எதார்த்தமாக கூறியுள்ளாராம். அஜித்தின் இந்த சிம்ப்ளிஸிடி அனைவரையும் வியக்க வைக்கிறது.  

-விளம்பரம்-
Advertisement