விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், சென்னை பாஷை பேசியும், தன்னுடைய கானா பாடலால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து வரும் குழந்தை நட்சத்திரம் பூவையார் தான். தற்போது இவர் விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், பரியேறும் பெருமாள் புகழ் கதிர், காமெடி நடிகரான விவேக், யோகிபாபு போன்றவர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் சூப்பர் சிங்கர் பூவையர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு பாடலையும் பாடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதையும் படியுங்க : செல்லமடி நீ எனக்கு, கல்யாண பரிசு என 50 சீரியல்களுக்கு மேல் நடித்த காயத்ரியின் தற்போதைய நிலை ?
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஆப் தமிழா ஆதி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது பூவையூருடன் சேர்ந்து பாடல் பாடிய ஆதி, தனது அடுத்த படத்தில் பூவையரை கண்டிப்பாக பாட வைப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.