பாகுபலியோடு வெளியிட்டால் தன் படம் காலி ஆகிடும்னு என் படத்தோட வெளியிட்டு என் படத்தை காலி பண்ணார் அந்த பெரிய நடிகர். விவேக்கின் பழைய வீடியோ.

0
476
kamal
- Advertisement -

விவேக்கின் படத்தை கமலஹாசன் காலி செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார்.

- Advertisement -

விவேக் மரணம்:

அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. கடைசியாக இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்து இருந்த அரண்மனை 3 திரைப்படத்தில் விவேக் நடித்து இருந்தார். இந்த படம் விவேக் மறைவுக்கு பின் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மறைந்த விவேக் அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து LOL எங்க சிரி பார்ப்போம் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒடிடி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருந்தது.

முதலாம் நினைவு தினம்:

சமீபத்தில் தான் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் முதலாம் நினைவு தினம் வந்து இருந்தது. இதை ஒட்டி விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும், நடிகருமான செல் முருகன் தொடங்கி இருந்தார். அதேபோல் விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து இருக்கிறது.

-விளம்பரம்-

விவேக்கின் பழைய வீடியோ:

இந்த நிலையில் விவேக் உடைய பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் விவேக், நான் பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நடித்தேன். இந்த படம் முழுக்க முழுக்க ஹியூமர் படம். இரண்டு மணி நேரமும் விழுந்து விழுந்து சிரிக்க கூடிய ஒரு காமெடி படம். இந்த படத்தை தமிழகம், மலேசியா, கன்னடா, தெலுங்கு போன்ற பழமொழிகளிலும் வெளியிட உரிமை வாங்கி இருந்தோம். அப்போது ஒரு மிகப் பெரிய நடிகருடைய படம் வெளியிட இருந்தார்கள். அந்த நடிகர் யார்? என்று நான் சொல்ல மாட்டேன்.

பட தோல்வி காரணம்:

பாகுபலி போன்ற படத்துடன் வெளியிட்டால் தன்னுடைய படம் பிளாப் ஆகிவிடும் என்று நினைத்து 15 நாட்களுக்கு முன்னாடி நான் ரிலீஸ் செய்ய இருந்த பாலக்காட்டு மாதவன் படத்துடன் வெளியிட முடிவு செய்தார். நான் அவர்களிடம் கெஞ்சினேன், எவ்வளவோ மன்றாடி பார்த்தேன். ஆனால், அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழகம், மலேசியா என எல்லா இடத்திலும் எனக்கு கொடுத்த திரையரங்கு உரிமை திருப்பி தரப்பட்டது. பெரிய நடிகரின் படத்தை தான் வெளியிட தியேட்டர் உரிமையாளர்களும் முடிவு செய்து இருந்தார்கள்.

இதனால் என்னுடைய பாலக்காட்டு மாதவன் படம் பிளாப் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் விவேக் சொன்ன அந்த மிகப்பெரிய நடிகர் கமல் என்றும் அந்த படம் பாபநாசம் என்றும் கூறி வருகிறார்கள். அதற்கு காரணம் பாகுபலி படம் 2015 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி. பாபநாசம் படமும் பாலக்காடு மாதவன் படமும்

Advertisement