பாடலாசிரியர் விவேக் வெளியிட்ட “ஒரு விரல் புரட்சி” பாடல் வரிகள்.! மெர்சல் அதிரடி

0
292
vivek

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படதின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதே போல கடந்த 24 ஆம் தேதி இந்த படத்தில் இருந்து “சிம்டாங்காரன் ” என்ற பாடல் மட்டும் வெளியாகியிருந்தது நிலையில் இன்று “சர்கார்” படத்தின் அடுத்த தகவல் ஒன்று வெளியிட போவதாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது சன் குழுமம்.

விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்துக்கொண்டிருந்த அந்த அடுத்த அப்டேட் என்னவெனில், இன்று மாலை 6 மணிக்கு “சர்க்கார் ” படத்தில் இருந்து “ஒரு விரல் புரட்சி” என்று பாடலை வெளியிட போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பாடலின் வரியை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக இந்த பாடல் ஓட்டுரிமை அல்லது தேர்தல் சம்மந்தபட்ட ஒரு பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே, “சிம்டாங்காரன் ” பாடல் மூலம் குதூகுலமடைந்துள்ள விஜய் ரசிகர்கள் தற்போது “ஒரு விரல் புரட்சி” என்ற பாடலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.