திடீரென தமிழக முதல்வரை சந்திதது பேசிய விவேக்..! வாழ்த்து தெரிவித்த முதல்வர்..! இதுதான் காரணமா..?

0
275

தமிழில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வந்தவர் காமெடி நடிகர் விவேக். தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள விவேக், சின்ன கலைவாணர் என்ற பட்டதையும் பெற்றவர் அதோடு இவர் அப்துல் காலம் அவர்களுக்கு மிகவும் அபிமானமான ஒரு நபராவர். சமீபத்தில் நடிகர் விவேக் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களை சந்தித்துள்ளார்.

vivek planting

டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு காமெடி நடிகர்களான விவேக் மற்றும் தாமு கொஞ்சம் செல்ல பிள்ளைகளாக இருந்து வந்தனர் என்றே கூறலாம். அதில் காமெடி நடிகரான விவேக் மறைந்த குடியரசு தலைவரின் சிறந்த மாணவன் என்றும் கூறலாம். அப்துல் கலாமின் சிந்தனைகளை மட்டுமல்ல ‘கிறீன் கலாம் ‘ என்ற அமைப்பின் மூலம் மரக்கன்றுகளை நட்டு வருகிறார் நடிகர் விவேக்.

இதுவரை 25 லட்ச மரக்கன்றுகளுக்கு மேல் நடிகர் விவேக் நட்டுள்ளார். மேலும், அப்துல் காலம் கூறியது போல 1 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார் நடிகர் விவேக். இந்நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி அவரகளை நடிகர் விவேக் சந்தித்துள்ளார்.

Actor-Vivek

அந்த சந்திப்பின் போது அரசு மருத்துவமனைகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார் நடிகர் விவேக். அப்துல் காலம் அவர்களின் கனவை நினைவக்க நடிகர் விவேக் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அவரது முயற்சி வெற்றி பெற நாமும் மனமாற பாராட்டுகிறோம்.