இந்திய அணியை வீடியோ பதிவிட்டு கிண்டல் செய்த விவேக் ஓபராய்.! ரசிகர்களின் ரியாக்க்ஷன்.!

0
2890
Vivek-Oberai
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி அரையிறுதியில் பரிதாபமாக தோற்று வெளியேறியது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிக்கான உலக கோப்பை அரை இறுதிப்போட்டி கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி மிகவும் சுலபமான இலக்கையே இந்திய அணிக்கும் நிர்ணயித்தது. ஆனால், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றைபடை ரன்களில் அவுட் ஆனதால் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியடைய முக்கிய காரணமா இருந்தது. இந்திய அணி தோல்வியடைந்த தருணத்தில் இருந்து இன்னும் ரசிகர்கள் மீளவில்லை.

இதையும் பாருங்க : இறுதி நாளில் வனிதாவிற்கு 50 வாக்குகளையும் அளித்த ரசிகர்கள்.! காரணம் இது தானாம்.! 

- Advertisement -

இந்திய அணியின் தோல்விக்கு பல்வேறு பிரபலங்களும் ஆறுதல் கூறி வரும் இந்த நிலையில், பிரபல இந்தி நடிகரான விவேக் ஓபராய் இந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பெண் ஒருவர், எதிரில் வரும் நபர் ஒருவரை அணைப்பது போல சென்று பின்னர் பின்னால் வருபவரை அணைத்துக்கொள்கிறார்.

-விளம்பரம்-

இந்த விடியோவை இந்திய அணியுடன் ஒப்பிட்டு, இப்படி தான் இந்திய ரசிகர்களுக்கும் நடந்தது என்று கிண்டலாக பதிவிட்டிருக்கிறார் விவேக் ஓபராய். இந்த பதிவினை கண்ட ரசிகர்கள், எப்படி ஐஸ்வர்யா ராய் உங்களைவிட்டு அபிஷக் பச்சனை திருமணம் செய்து கொண்டாரோ அப்படி தான் இந்த வீடியோ இருக்கிறது என்று விவேக் ஓபராய்க்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

Advertisement