பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன்கடந்த திங்கள்கிழமை அறிவிக்கபட்டது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலா ரசிகர்கள் விரும்பினாலும். அவர் இத வாரம் கண்டிப்பாக பிக் பாஸ்சால் காப்பாற்றப்பட்டுவிட்டார் என்பது தான் உண்மை.
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்ற படுவர் என்று கூறப்படுகிறது. மோகன் வைத்யா வெளியேற்றப்படுவதற்கு முக்கிய காரணமே, இனி அவரால் எந்த கண்டண்டும் இல்லை என்று பிக் பாஸ் குழு முடிவு செய்து விட்டது என்று தான் தோன்றுகிறது.
இதையும் பாருங்க : கர்ப்பமாக இருக்கும் வேலையில் மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்திய சுஜா வருனீ.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பாத்திமா வெளியேறியதற்கு காரணமும் இது தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாத்திமா கூறுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிலைக்க வேண்டும் என்றால் ஒன்று அரைகுறையான ஆடை அணிய வேண்டும் இல்லை என்றால் சர்ச்சையை கிளப்பும் போட்டியாளராக இருக்க வேண்டும். அது இரண்டையும் என்னால் பண்ண இயலாது என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது பாத்திமா அடுத்து இந்த வாரம் வெளியேற போகிறார் மோகன் வைத்யா. பல்வேறு இணையத்தளத்தில் நடத்தப்பட்ட ஓட்டிங்கில் கூட வனிதாவுக்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது. நமது Behind Talkies தளத்தில் நடத்திய ஓட்டிங்கிலும் மோகன் வைத்யா மற்றும் வணிதாவிற்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது.
ஆனால், தற்போது வனிதாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், இதற்கான காரணம் தான் கொஞ்சம் வியப்பாக இருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தால் தான் சுவாரசியமாக இருக்கும் அதனால் வனிதாவிற்கு தான் எங்கள் முழு 50 வாக்கும் என்று ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.