சிம்டாங்காரன் பாடல் வரிகளை கிண்டல் செய்த நபர்களுக்கு பதிலடி கொடுத்த பாடலாசிரியர் விவேக்..!

0
474
Vijay

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழா அடுத்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து “சிம்ட்டாங்காரன்” என்ற பாடல் மட்டும் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியாகியிருந்தது.

இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியிருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த “மெர்சல்” படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடலை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்தது என்பது தெரியும்.

எனவே, “சர்கார்” படத்திலும் விவேக் தான் பாடலாசிரியர் என்றதும் ரசிகர்கள் அனைவரும் “மெர்சல்” படத்தில் இடம்பெற்ற பாடலைவிட ஒரு மாஸ் பாடல் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், சமீபத்தில் வெளியான “சிம்டாங்காரன் ” பாடல் பெரும்பான்மையான ரசிகர்களை கவர்ந்தாலும் ஒரு சிலர் இந்த படத்தின் பாடல் வரிகள் புரியவில்லை என்று குறைகூறி கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் “சிம்டாங்காரன் ” பாடலை பற்றி விமர்சிக்கும் நபர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள பாடலாசிரியர் விவேக், விமர்சங்களை கண்டு நான் வெட்கப்பட போவது இல்லை. படத்தை பார்த்துவிட்டு அப்போதும் நான் எழுதிய வரிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் வருங்காலத்தில் நீங்கள் விரும்பியவாறு பாடலை எழுதுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.