சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார்.
இப்படி ஒரு நிலையில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இதையும் பாருங்க : ‘டீனேஜ் வயசு பசங்க கூட இப்படி செய்வீர்களா’ – முகம் சுளிக்கும் கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் கொடுத்த பதில்.
விவேக்கின் இறப்பு பலரும் சோகத்தை ஏற்படுத்தினாலும், நடிகர் செல் முருகனுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு தான். செல் முருகன் பல ஆண்டுகளாக விவேக்குடன் பணியாற்றியவர். விவேக்கின் படங்களில் நிச்சயம் செல் முருகன் இடம்பெற்று விடுவார்.சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான், விவேக்கின் இறுதி சடங்கில் செல் முருகன் கண் கலங்கி அழுத வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
மேலும், விவேக்கின் இறப்பிற்கு பின்னரும் விவேக்கை மறக்காமல் தொடர்ந்து பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார் செல்முருகன். அந்த வகையில் இன்று விவேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் விவேக்குடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார், மிஸ் யூ என்று பதிவிட்டுள்ளார்.