என் மகன் பெருசா வளந்துட்டான், அவன சமாளிக்கவே என் சக்தி போயிடுது – மகனுடன் அஞ்சனா பதிவிட்ட புகைப்படம்.

0
67911
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்ததது. இதனால் பலரும் இவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வந்தார்கள்.

-விளம்பரம்-

நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இந்த இளம் ஜோடியினருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இரு இவர்கள் இருவரது திருமணமும் கோடம்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. சந்திரன் – அஞ்சனா தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

- Advertisement -

குழந்தை பிறந்த பின்னர் அஞ்சனா தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்வாரா என்ற கேள்வி எழுந்தது.தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், இம்முறை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிரங்கியுள்ளார் அஞ்சனா. மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வந்தது குறித்து பேசிய அஞ்சனா, பத்து வருடங்களாக சன் ம்யூசிக்கில் இருந்து விட்டேன் நான் பிரேக் எடுத்த பின்னர் பலர் என்னை மீண்டும் வரச் சொல்லி அணுகினார்கள்.எனவே, தொகுப்பாளினியாக மீண்டும் பணியாற்ற விரும்பினேன்.

மேலும், நான் வேலை செய்யும் இடத்தையும் ஒரு மாற்றத்திற்காக மாற்றிக் கொள்ளலாம் என்று விரும்பினேன்.நான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சேர்ந்ததுமே நான் போட்ட முதல் கண்டிஷன் என் குழந்தையுடன் நான் எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான். ஷூட்டிங்கின்போது கூட தனது குழந்தையுடன் நான் இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர்களும் சம்மதித்தார்கள் அதனால் எனக்கு வேறு என்றும் தேவைப்படவில்லை என்று கூறியிருந்தார் அஞ்சனா. இப்படி ஒரு நிலையில் தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அஞ்சனா, என் மகன் மிகவும் வளர்ந்துவிட்டான், அவனை சமாளிப்பதிலேயே என் சக்தி போய்விடுகிறது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement