ரெண்டு ஆண்டுக்கு முன்னரே இப்படி நடந்துச்சு, ஆனால், இந்த முறை ரொம்ப பயமா இருக்கு. பாலியல் தொல்லை குறித்து அஞ்சனா புகார்.

0
22878
anjana
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் ஒரு அழகான ஆண் குழந்தை கூட பிறந்தது.

இதையும் பாருங்க : பிறந்தநாளை கொண்டாடிய இரண்டாவது நாளில் இறந்த நாளான கொடுமை – இமான் அம்மாவின் பரிதாப நிலை.

- Advertisement -

இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வந்தார். இப்படி ஒரு நிலையில் +91-96557-12265 என்ற தொலைபேசி நம்பரில் இருந்தும் இன்ஸ்டாகிராமிலும் தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக அஞ்சனா கணவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே அந்த நபர் மீது சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ள சந்திரன், தமிழ் நாடு போலீசார் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அஞ்சனா கூறியுள்ளதாவது, இதே போல இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது அப்போது சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த பிரச்சனை தீர்ந்தது. நான் அவதூறாக பேசும் எத்தனையோ நபர்களை பிளாக் செய்த்துள்ளேன். ஆனால், இந்தமுறை என்னை மிகவும் பயமுறித்துயுள்ளது.

-விளம்பரம்-
Advertisement