சிவகார்த்திகேயன் குறித்து தொகுப்பாளினி பாவனா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் ஒரு காலத்தில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
பின் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தவுடன் அங்கு சென்று விட்டார். பிறகு விஜய் டிவி பக்கமே வரவில்லை. கிரிக்கெட், படத்தின் விழா மட்டுமே தொகுத்து வழங்கி
வந்தார். மேலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை பக்கம் பாவனா வந்தார். கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி இருந்த டான்ஸ் ஷோவை பாவனா தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது இவர் பிசியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார்.
பாவனா பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பாவனா, சிவகார்த்திகேயனுடைய போராட்ட குணம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். துரோகம், வளர்ச்சியை தடுப்பது
என்று அவருக்கு யாராவது செய்தால் அதை எல்லாம் உடைத்து பல மடங்கு வளர்ச்சி அடைந்து சாதித்து விட்டு வந்து மீண்டும் அவர்களுடன் அன்பாக இயல்பாக பேசுவார். அவர் அப்படிப்பட்டவர் தான். கெடுதல் நினைப்பவர்களுக்கும் அவர் அப்படித்தான் பதிலடி கொடுப்பார்.
சிவகார்த்திகேயன் பற்றி சொன்னது:
அந்த விஷயம் எனக்கு வியப்பாக இருக்கும். ஒருவர் உங்களுக்கு கெடுதல், துரோகம் செய்தால் அவர் தொட முடியாத உயரத்திற்கு வளர்ந்து விடுங்கள். அப்போது அவர்களால் உங்களை ஏதும் செய்ய முடியாது. அதுதான் சிறந்த பதில் அடியாக இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், பாவனா- சிவகார்த்திகேயன் இருவருமே இணைந்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்கள்.
சிவா-பாவனா குறித்த தகவல்:
இருவருமே நல்ல நண்பர்கள். இருவருமே அவரவர்கள் பாதையில் முன்னேறி தற்போது வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் பிரபலமான நடிகராக இருந்தாலும் பாவனா பிரபலமான தொகுப்பாளனியாக பரிமாற்றம் அடைந்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் குறித்த தகவல்:
இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த அமரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.