பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து ஹேம்நாத்தை கைது செய்தனர்.

இதையும் பாருங்க : அட, கொடுமையே எஸ் பி ஜனநாதன் வீட்டில் நேர்ந்த அடுத்த இழப்பு – சோகம் தாங்காமல் ஏற்பட்ட மாரடைப்பு.

Advertisement

இப்படி ஒரு நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக ஹேம்நாத்திற்கும் சித்ராவிற்கும் சண்டை வந்ததாகவும், சித்ராவை ஹேம்நாத் யாருடன் ஆட்டம் போட்டு வந்த என்று சண்டையிட்டதாகவும் அதற்கு சித்ரா, நீ இல்லனா வாழ முடியாது என்று கூற செத்து தொல என்று ஹேம்நாத் கோபமாக அறையை விட்டு வந்த நேரத்தில் தான் சித்ரா தூக்கு போட்டு கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியது.

ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹேம்நாத் ஜாமினில் வெளியில் வந்தார். இப்படி ஒரு நிலையில் சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த அறையில் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் பொருட்களை எடுத்து செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அப்போது ஹோட்டல் அறைக்குள் சென்ற சித்ராவின் பெற்றோர்கள் இருவரும் சித்ரா தூக்கிட்டு தொங்கிய பேனை பிடித்து கதறி அலுத்துள்ளனர்.

Advertisement
Advertisement