நான் ஆண்டியா? கடுப்பான தொகுப்பாளினி வி ஜே மகேஸ்வரி. ஏன்னு பாருங்க.

0
55366
vj-maheswari
- Advertisement -

தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளர்கள் நீண்ட வருடங்கள் ஆகியும் தற்போதும் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான மகேஸ்வரியும் ஒருவர். மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான்.

-விளம்பரம்-
Image

அதன் பின்னர் இசைஅருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் இடையில் திருமணம் ஆனதால் பிரேக் எடுத்துக்கொண்ட மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார் அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார் மேலும் இவர் தாயுமானவன் புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : பாம்பே மாடலிங் இருந்தால் நல்ல இருக்கும், இவங்க எல்லாம் வேணாம்-னு சொல்லிட்டாங்க. பாரதி கண்ணம்மா நடிகை.

- Advertisement -

மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் மகேஸ்வரி தற்போது தன் மகன் மற்றும் தன் தாய்வீட்டாருடன் வசித்து வருகிறார். தற்போது இன்டெபெண்டண்ட் தாயாக வாழ்ந்து வரும் ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் புடவையில் வளைவு நெழிவுகள் தெரியும் படி ஒரு போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்தார்.அதன் பின்னர் தொடர்ந்து போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இவர் நடித்திய போட்டோ ஷூட்டை வெளியிட்ட பிரபல ஊடகம் ஒன்று, தலைப்பில் ‘ஆன்டி ஆனாலும் அடங்காத தொகுப்பாளினி’ என்று குறிப்பிட்டுவிட்டது. இதனால் அதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மகேஸ்வரி, உண்மையாகவா நீங்கள் செய்தி சேனல் தானா? இல்லை? உங்களுக்கு எப்படி இது போன்ற வார்த்தைகள் எல்லாம் கிடைக்கிறது. நீங்கள் பயன்படுத்திய வார்த்தை நீங்கள் எந்த அளவிற்கு எண்ணத்தை கொண்டவர் என்பதைக் காண்பிக்கிறது உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்’ என்று கடுப்பாகி உள்ளார் இதனால் அந்த செய்தியை குறிப்பிட்ட அந்த பதிவை இருந்து நீக்கிவிட்டது.

Advertisement