மணிமேகலை-உசேனை முதன் முதலாக வீட்டுக்கு அழைத்து மணிமேகலை அம்மா கறி விருந்து வைத்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.
இதனால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். ஹுசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
மணிமேகலை குறித்த தகவல்:
சமீபத்தில் தான் உசேன் வீட்டில் இவர்களை சேர்த்துக் கொண்டனர். மணிமேகலை தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். தற்போது இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து இருக்கிறது. அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலேயே செட்டில்ஆகி விட்டார் என்று சொல்லலாம்.
யூடுயூப் சேனல்:
அதே போல இந்த தம்பதி யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் இவர்கள் புது புது வித்தியாசமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் இவர்கள் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதற்கு HM லேண்ட் என பெயர் வைத்து வீடியோ ஒன்றையும் யூடியூப்பில் வெளியிட்டு இருந்தார்கள். பின் தாங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணிக்காக போர் போட்டு தண்ணீர் எடுத்து இருந்தார்கள்.
திருமணத்திற்கு பின் உசேன் மற்றும் மணிமேகலை:
தற்போது இவர்கள் சொந்தமாக வீடு கட்டி வருகிறார்கள். இந்நிலையில் முதல் முதலாக அம்மா வீட்டிற்கு சென்று கறி விருந்து சாப்பிட்ட வீடியோவை மணிமேகலை தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்திருக்கிறார். அதாவது, திருமணத்திற்கு பிறகு உசேன் மற்றும் மணிமேகலை இருவருமே தனியாக தான் வாழ்ந்து வந்தார்கள். இரு வீட்டிலுமே இவர்களை ஏற்றுக் கொள்ளாததால் பல சிரமங்களை கடந்து தான் இவர்கள் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள்.
மணிமேகலை அம்மா வைத்த கறி விருந்து:
இவர்கள் பிஎம்டபிள்யூ கார், பைக், சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டுதல் என பல முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் முதன்முதலாக மணிமேகலையின் அம்மா உசைன் மற்றும் மணிமேகலையை தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருக்கிறார். பின் அவர்களுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்து சாப்பிட வைத்திருக்கிறார்கள். இந்த வீடியோவை தான் மணிமேகலை சந்தோஷத்துடன் தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களும் மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து சந்தோஷமாக இருங்கள் என்று கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.