சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.
மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இதையும் பாருங்க : அப்பாவானார் பிக் பாஸ் நடிகர் மஹத் – அவரே பதிவிட்ட மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம்.
மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.இடையில் கொஞ்சம் சின்னத்திரையில் பிரேக் எடுத்துக்கொண்ட மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிர்சஸ் சின்னத்திரை ‘ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மேலும், கடந்த ஆண்டு நிறைவடைந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.
அதே போல சமீபத்தில் நிறைவைடந்த குக்கு வித் கோமாளி சீசன் 2விலும் கலந்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் 2010 ஆம் ஆண்டு நடந்த ஒரு அழகிப் போட்டி ஒன்றில் மணிமேகலை கலந்து கொண்டு அதில் சிறந்த முடிக்கான பட்டத்தை வென்று இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. தற்போது மணி மேகலை நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் டிவி மூலம் மீண்டும் ஆங்கராக பணியாற்றி வருகிறார்.