விஜே மணிமேகலை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அவமானப்பட்டேன் என்று வெளியிட்டிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான விஜேவாக வலம் வந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமானார். பின், தனது எதார்த்தமான பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தார்.
இதனால் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்களின் காதலுக்கு இரு விட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். உசேனில் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் உசேன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
மணிமேகலை குறித்து:
சமீபத்தில் தான் உசேன்- மணிமேகலை வீட்டில் சமரசம் ஆகி உள்ளார்கள் என்று தெரிகிறது. மணிமேகலை தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்தார். முதலில் அந்த நிகழ்ச்சியில் முதலில் கோமாளியாக வந்த இவர் தற்போது, ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியை ரக்ஷனோடு சேர்ந்து தொகுத்து வழங்குகிறார்.
யூடியூப் சேனல்:
அதேபோல், இந்த தம்பதி youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். இந்த சேனலில் இவர்கள் தங்களது வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் இவர்கள் ஒரு நிலம் வாங்கி அதற்கு HM லேண்ட் என பெயர் வைத்து வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்கள். தற்போது அங்கு வீடும் கட்டி வெற்றிகரமாக இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மணிமேகலை வெளியிட்ட வீடியோ:
இந்நிலையில், சமீபத்தில் விஜே மணிமேகலை தனது கணவரோடு சென்னையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு அவசர அவசரமாக கிளம்பி போனதால் இரண்டு கால்களிலும் வெவ்வேறு செருப்புகளை போட்டுக்கொண்டு போயிருக்கிறார். இதை மணிமேகலை கவனிக்காமல் வீட்டிலிருந்து பாஸ்போர்ட் அலுவலகம் சென்ற பின் தான் பார்த்திருக்கிறார். அதை வீடியோவாக எடுத்த மணிமேகலை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அசிங்கப்பட்ட மணிமேகலை:
அதில் அவர், நான் பாஸ்போர்ட் ஆபீஸில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பட்ட அவமானம் இருக்கே ரொம்ப கேவலமாக இருக்கிறது. இது ரொம்ப சங்கடமான தருணம். இந்த அவமானத்தை நீங்கள் எப்போதாவது அனுபவிச்சு இருக்கீங்களா? இன்று கேட்டுள்ளார். இதைப் பார்த்த மணிமேகலையின் ரசிகர்கள், ‘யாராவது கேட்டா ட்ரெண்டிங் என்று சொல்லி விடுங்கள்’ என்றும், ‘அக்கா நீங்க ஒரு அல்ட்ரா லெஜன்ட்’ என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.