அங்கு நடந்த வலி வேதனை எல்லாம் – தான் கார்னர் செய்யப்பட்டது குறித்து பார்வதி.

0
3510
parvathy
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கின்றது. வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் விட்டு அவர்களுக்கு கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் களம் இறக்கி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் அன்றே போட்டியாளர்களுக்குள் குழாயடி சண்டை அளவிற்கு சர்ச்சைகள் பயங்கரமாக கிளம்பி இருந்தது.

-விளம்பரம்-

பின் வாரம் வாரம் போட்டியாளர்களை எலிமினேட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து விஜே பார்வதி வெளியேறினார். விஜே பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்தபோது அவர் பண்ண சேட்டைகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பார்வதியிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் பார்வதியிடம் சர்வைவர் நிகழ்ச்சியில் பல இடங்களில் நீங்க டென்சன் ஆனது குறித்தும், நான் கார்னர் செய்யப்பட்டேன் என்று கூறியதை குறித்து கேட்டதற்கு பார்வதி கூறியது, சர்வைவர் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் அடிப்படை வசதிகள் மட்டும் தான் அங்கு செய்து தருவார்கள்.

இதையும் பாருங்க : ஜெய் பீம் படத்தில் பழங்குடி பெண்ணாக நடித்துள்ள நடிகையா இது ? இந்த போட்டோவ பாத்தா ஷாக்காகிடுவீங்க.

- Advertisement -

சிட்டி வாழ்க்கையில் வாழ்கிற மாதிரி எல்லாம் அங்கு எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க ஒரு புதுசான இடம். சரியான சாப்பாடு, தூக்கம் எதுவுமே கிடையாது. அதோட டிவியில் நம்மளுடைய இமேஜ் தப்பா வந்துவிடுமோ என்ற பதற்றமும் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு. அதுவும் பெண்களுக்கு அங்கு பீரியட்ஸ் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இதனால் மனநிலையிலும் உடல் நிலையிலும் பல மாற்றங்களும் போராட்டங்களும் இருக்கும். அதோடு யாருமே கார்னர் செய்யாமல் நானாவே தான் கார்னர் செய்யப்பட்ட மாதிரி உணர்ந்தேன் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், நான் கார்னர் செய்யப்பட்டது உண்மை. அங்கு நடந்த வலி வேதனை எல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறினார். இதனை தொடர்ந்து சர்வைவர் நிகழ்ச்சியில் கழிப்பறை, குளியல் வசதிகள் பற்றி கேட்டதற்கு பார்வதி கூறியது,

சர்வைவர் நிகழ்ச்சி கஷ்டமா இருக்கும் என்று என்னுடைய நண்பர்கள் சொன்னப்ப நான் பார்த்துக்கிறேன் என்று இருந்தேன். ஆனால், கழிப்பறை போறதுக்கும், குளிக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டேன். நான் சரியாக குளித்து 20 நாட்களுக்கு மேல் ஆகுது. பாத்ரூம் போக வேண்டும் என்றால் ஒரு இடத்தை காண்பித்தார்கள். பாத்ரூம் போறதுக்கு மட்டும் நல்ல வேளையாக ஒரு வழியை அமைத்து தந்தார்கள். ஆழமான குழிக்கு மேல் டாய்லெட் மாதிரி செட்டப் தான். அதுவும் இல்லை என்றால் பீரியட்ஸ் நேரத்தில் கஷ்டப்பட்டு இருப்போம். அதை வைத்துதான் நாங்கள் சமாளிக்க முடிந்தது. இல்லை என்றால் எங்களுடைய நிலைமை திண்டாட்டம் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement