சிவாஜி இறக்கும் போது நடிகரை பார்த்ததாக சொன்ன ஒய் ஜி மகேந்திரன். தன் பங்கிற்கு கலாய்த்து பார்வதி போட்ட ட்வீட்.

0
58554
vj
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. பல்வேறு மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்துப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த விவகாரம் துவங்கிய நாளில் இருந்தே ஒய் கி மகேந்திரனும் அவரது குடும்பத்தினரும் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் இந்த விவகாரம் குறித்து மதுவந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,  ஒரு தனிப்பட்ட நபர் செய்த விஷயம் என்று தான் புகார் வந்துள்ளது.ஆனால், ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் பள்ளியையே தவறாக எழுதுகிறார்கள்.என் பாட்டி திருமதி ஒய்ஜிபி ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைத்து வளர்த்துவிட்ட மிகப்பெரிய கல்விக்கூடம் இது.

இதையும் பாருங்க : பணம் கொடுத்தவனுக்கு எவ்ளோ வலிக்கும். உனக்கு வெக்கமா இல்ல இப்படி சொல்ல – இளம் நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

- Advertisement -

அவங்க பேருக்கோ, இல்லை இந்த பள்ளியின் மரபுக்கோ எந்த கலங்கமும் வரக்கூடாது. அப்படி வந்தால் நாங்கள் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டோம் என்று கூறி இருந்தது பலரின் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஒய் ஜி மகேந்திரன், மதுவந்தி ஆகியோர் பேசிய பழைய வீடியோக்களை எல்லாம் தோண்டி எடுத்து ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவாஜியின் இறப்பு குறித்து ஒய் ஜி பேசிய வீடியோ தற்போது கேலிக்கு உள்ளாகியுள்ளது.

This image has an empty alt attribute; its file name is 1-170-863x1024.jpg

அந்த வீடியோவில் பேசியுள்ள அவர்கள் சிவாஜி கணேசன் இறந்த போது நாங்கள் இருவருர் மட்டும் தான் உடன் இருந்தோம். அப்போது அவர் தனது கடைசி மூச்சை விட்ட போது கர்ணன் படத்தின் கிளைமாக்ஸ்ஸை பார்ப்பது போல இருந்தது. இறந்த போது கூட அவர் பிறவி நடிகர் என்பதை நிரூபித்தார். அவர் இறந்து கொண்டு இருக்கிறார் என்பதை விட அவருக்குள் இருந்த அந்த நடிகரை தான் நாங்கள் பார்த்தோம் என்று கூறி இருந்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-169-1024x463.jpg

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சிவாஜியின் இறப்பை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு விதமான மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வீடியோவை பார்த்த பார்வதியும் என்று கமன்ட் செய்து கலாய்த்து உள்ளார்.

Advertisement