தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜவும் தொகுப்பாளினியுமான Vj பார்வதி. இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.
27 years ahm… ithellam nambura mathiriya iruku…
— PʀᴀᴠᴇᴇɴKʀ (@praveenkr93) April 14, 2023
பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த சில ஆண்டுக்கு முன்னர் ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.
பார்வதியும் கேலிகளும் :
அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். ” உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை” என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.
— Surviva J Mani (@j_surviva) April 15, 2023
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை :
அதே போல இவரை பலரும் மியா கலீபாவுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இப்படி இவர் குறித்து பல விதமான கேலிகள் இருந்தாலும் அதை மிகவும் எளிதாக கடந்து சென்றுவிடுகிறார் பாரு. யூடுயூப் பேட்டிகள் மூலம் பிரபலமடைந்த பார்வதிக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கூட வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார். அதே போல சர்வைவர் நிகழ்ச்கியிலும் பங்கேற்றார்.
27வது பிறந்தநாள் :
இப்படி ஒரு நிலையில் தன்னை அடிக்கடி ஆன்டி ஆண்டி என்று அழைத்து வருவதால் முதன் முறையாக தன்னுடைய வயதை கூறியுள்ளார் Vj பார்வதி. நேற்று பார்வதி தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இதனால் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்ட பார்வதி ’27 வயது, பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்வர்களுக்கு நன்றி’ என்று பதிவிட்டிருந்தார்.
தன் வயது குறித்து பார்வதி :
பார்வதியின் இந்த பதிவை கண்ட பலர் ‘உங்களுக்கு 27 வயசா ? நம்பிட்டோம் ‘ என்று கேலி செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘ஏன் என்னுடைய வயதை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க? சத்தியமா சொல்றேன் 27 தான். ஹிப் ஹாப் தமிழாவுடன் பேட்டி எடுத்த போது ஆண்டி என்ற அந்த விசயத்தினலும் நான் அதிகம் பேசுவதாலும் எல்லோரும் என்னை பெரிய பெண் என்று நினைக்கிறார்கள் அட இல்லப்பா நம்மங்களேன்’ என்று பதிவிட்டுள்ளார். ‘vj பார்வாதியின் இந்த பதிவை பலர் நம்பினாலும் பெரும்பாலோனோர் ‘உங்களுக்கு 27 வயசு தானா நம்பிட்டோம்’ என்று கேலி தான் செய்து வருகின்றனர்.