‘நயனை விட நீ அழகா இருக்க’ விஜே பார்வதியை புகழ்ந்த ரசிகர்கள் – அதற்கு அவரின் பதில்.

0
756
vjparvathy
- Advertisement -

நயன்தாராவை விட விஜே பார்வதி பார்க்க அழகாக இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்து இருக்கிறது. சமீப காலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-69.png

மேலும், நயன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் இருக்கிறார். தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நயன்தாரா படங்களை தயாரித்து இருக்கிறார். நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன், சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

நயன்-விக்னேஷ் சிவன் காதல்:

இவர்களின் திருமணம் எப்போது ?என்பது தான் ரசிகர்கள்,பிரபலங்கள் பலரும் எதிர்பார்த்து இருக்கும் ஒரு விஷயம். இருந்தாலும் இவர்கள் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் கிரிக்கெட் பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

நயன் நடிக்கும் படங்கள்:

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் காத்துவாக்குல 2 காதல். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், லயன்,O2, காட் ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவனும் தல அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்குகிறார். அதற்கான பணிகளில் விக்னேஷ் ஈடுபட்டு மும்முரமாக இறங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

நயனுக்கு கிடைத்த விருது:

இந்த நிலையில் விஜே பார்வதியைப் பார்த்து நயன்தாராவை விட அழகாக இருக்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீபத்தில் கலாட்டா மீடியா சார்பாக கலாட்டா grown 2022 என்ற விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கலந்துகொண்டிருந்தனர். மேலும், அதில் நயன்தாராவுக்கு “The Empress of Indian Cinema” என்று விருது வழங்கப்பட்டிருந்தது. பின் விஜே பார்வதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.

விஜே பார்வதி குறித்து ரசிகர்கள் சொன்னது:

இந்த நிலையில் இதைப் பார்த்த நெட்டிசன்கள் நயன் விட நீ அழகா இருக்கிற மாதிரி இருக்கு பாரு என்று கமென்ட் போட்டு இருக்கிறார்கள். அதற்கு விஜே பார்வதி ரொம்ப நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். அப்படியே தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஜே பார்வதியை புகழ்ந்து பேசி பதிவு போட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த பதிவும், புகைப்படமும் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் விஜே பார்வதி. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement