தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இன்று சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
படத்தில் சிம்பு அவர்கள் தன்னுடைய அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இவர் வயகாட்டில் வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை பாதுகாத்து வருகிறார். அப்போது ஒரு நாள் வயக்காட்டில் வேலை செய்யும் போது சிம்புவுக்கு விபத்து ஏற்படுகிறது. இதை நினைத்து அவருடைய தாய் பயப்படுகிறார். பின் உறவினர் மூலம் சிம்புவை வேறு ஒரு வேலைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார். இந்த சூழ்நிலையில் தான் உறவினரும் தற்கொலை செய்து கொள்கிறார்.
படத்தின் கதை:
பின் சிம்பு மும்பைக்கு செல்கிறார். அங்கு பரோட்டா கடையில் வேலை செய்கிறார். எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சிம்பு சிக்கி கொள்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? சிம்புவின் குடும்பத்தின் நிலைமை என்ன? சொந்த ஊருக்கே சிம்பு திரும்பினாரா? என்பது தான் படத்தின் மீதி. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் ஏ ஆர் ரகுமான் இசைகளும் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
படத்தில் சிம்பு:
படத்தில் சிம்பு அவர்கள் முத்து எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத தன்னுடைய நடிப்பை சிம்பு வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் வெகுளித்தனமாகவும், இரண்டாம் பாதியில் மாசான நடிப்பையும் சிம்பு கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளில் வழக்கம் போல் சிம்பு பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கதாநாயகியாக சித்தி இத்தானி நடித்திருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார். வழக்கம்போல் தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஜாபரின் நடிப்பு சிறப்பாக வந்திருக்கிறது. பல இடங்களில் வசனங்களும், காட்சிகளும் கிளாப்ஸை வாங்கி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பல காட்சிகளை சிங்கிள் சாட்டில் இயக்குனர் எடுத்திருக்கிறார். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கூடுதல் சிறப்பு.
பைக் பரிசு :
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததோடு ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால், அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனனுக்கு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கவுதம் மேனனுக்கு அவர் கொடுத்துள்ள புல்லட் பைக்கின் விலை ரூ.2. 39 ஆகும். சமீபத்தில் வெளியான விக்ரம் பட வெற்றிக்கு நடிகர் கமல் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்கை பரிசாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.