அந்த நிகழ்ச்சியை நிறுத்தியது போல பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நிறுத்துங்கள்.! எழுந்த புதிய சர்ச்சை.!

0
4470
kamal

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது டால்க் ஆப் தி டௌனாக இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எச்சரிக்கை விட்டுள்ளார்.

Image result for bigg boss kamal

இதுகுறித்து பேசியுள்ள வேல்முருகன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ‘பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சி, கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கிறது. கலாசார பண்பாட்டு விழுமியங்களில் கை வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.

இதையும் பாருங்க : கற்பத்தால் படு குண்டாக இருந்த சானியா மிர்ஸா.! இப்போ எப்படி ஒல்லியாகிட்டாங்க பாருங்க.!

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே தொலைக்காட்சியில்  கேரளப்பெண்கள் அழகா தமிழ் பெண்கள் அழகா என விவாதம் நடத்தினார்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் பண்பாட்டு சீரழிவை உண்டாக்கும் என்பதால் அப்போதே நிறுத்தச்சொன்னோம் ,அவர்களும் நாங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்- வேல்முருகன் எச்சரிக்கை

அதே போல இந்த நிகழ்ச்சியை தமிழக அரசு உடனடியாகத் தடைசெய்ய வேண்டும். தமிழக அரசு,  தடைசெய்யத் தவறும்பட்சத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்ச் சமூகத்தின் பெண்களைக்கொண்டு  விஜய் தொலைக்காட்சிக்கு எதிராகவும்  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம்

-விளம்பரம்-
Advertisement