ஸ்மோகிங் ரூமில் என்ன இருக்கு பாருங்க.! முதன் முறையாக வெளியான புகைப்படம்.!

0
69540
smooking room

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் சீசன் தொடங்கி தற்போது உள்ள மூன்றாவது சீசன் வரை போட்டியாளர்கள் புகைப்பிடிப்பதற்கு என்றே தனியாக ஒரு அறை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களில் கழிவறைக்கு அருகில் இருந்த இந்த ஸ்மோக்கிங் ஏரியாவானது, தற்போது கார்டன் ஏரியாவில் ஒரு குகை போன்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

முதல் சீசனில் ஓவியா புகை பிடிப்பது மிகவும் சர்ச்சையான விஷயமாக பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த சீசனில் யாஷிகா ,வைஷ்ணவி, ஐஸ்வர்யா, மஹத் என்று பலரும் புகைபிடிப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால், இந்த சீசனில் யார் புகைபிடிப்பது என்று சரியாக தெரியவில்லை.

- Advertisement -

தற்போது பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் இந்த அறைக்குள் அடிக்கடி பெண்கள் தான் ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றனர். ஆனால், பெரும் பாலும் ஆண் போட்டியாளர்கள் யாரும் இந்த அறைக்கு செல்வது இல்லை. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மோகன் வைத்யா முகென் தான் பிக் பாஸ் வீட்டில் புகைபிடிகிறார் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அபிராமி ஸ்மோகிங் அறையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது முகென் அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த அறையின் உட்புற தோற்றம் தெளிவாக தெரிந்தது. அதில் ஒரு ஓரத்தில் ஒரு தீப்பெட்டியும் மேலும், சிகிரெட் தூளை தட்ட ஒரு அலமாரியும் இருகிறது.

-விளம்பரம்-
Advertisement