விஜயின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் விஜய்க்கு எதிர்க்கும் எதிர்ப்புகள். சோசியல் மீடியா முழுவதும் தற்போது லியோ படம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று நடிகர் அர்ஜுனன் பிறந்தநாள்.

Advertisement

இதனால் லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருக்கிறது. அதில் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிற ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தற்போது படம் வெளியாக சிறிது நாட்களே உள்ள நிலையில் தினமும் ஒவ்வொரு அப்டேட்டுகளை லியோ படக்குழு கூறி இருக்கிறது. அதன் படி அப்டேட்டுகளும் வந்த வண்ணமே இருந்தன. இந்த நிலையில் தான் கேரளாவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

கேரளாவின் எதிர்ப்பு

தற்போது விஜயின் கோட்டையாக இருக்கும் கேரளாவில் விஜய் படத்திற்கு எதிராக ஹேஷ்டகுகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அளவிற்கு கேரளாவிலும் ரசிகர் பலம் உள்ளது எந்த நிலையில் தான் கேரளா மக்கள் விஜய்யின் வீடியோ படத்தை புறக்கணிக்க போவதாக பதிவு செய்து வருகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து போது தமிழ்நாட்டை சார்ந்த விஜய் ரசிகர்கள் சிலர் மலையாளத்தில் உச்ச நடிகர்கள் ஆன

Advertisement

மோகன்லாலையும் அங்கு மலையாள சினிமாவையும் விமர்சித்தும் கிண்டலாகவும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள மக்கள் தற்போது x தளத்தில் #KeralaBoycottLEO பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் திரைப்படத்திற்கு கேரள மக்களின் லியோ படத்தின் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது அண்மையில் வெளியான விஜய் எங்கையோ படத்திற்கான போஸ்டர்களை கேரளாவில் அதிகம் பகிரப்பட்டது.

Advertisement
Advertisement