நாடோடி மன்னன் ஷூட்டிங்கில் எம்ஜிஆரை எதிர்த்து நடிகை பேசியிருக்கும் சம்பவம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் பழம்பெரும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் எம்ஜிஆர். இவர் நடிகர் என்பதைவிட தமிழ்நாட்டின் முதல்வர் என்று சொல்லலாம். இவரை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவர் எதிரில் நின்று பேசவே பலரும் தயங்குவார்கள்.

ஆனால், எம்ஜிஆரை எதிர்த்து பேசிய நடிகை தான் பானுமதி. தமிழ் திரையுலகில் எம் ஜி ராமச்சந்திரன்- பானுமதி மோதல் பற்றி பலரும் அறிந்தது தான். எம்ஜிஆர் சினிமாவில் ஹீரோவாக தனி இடம் பிடிப்பதற்கு முன்பே நடிகை, பாடகி, இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தமிழ் திரை உலகில் சாதனை படைத்தவர் பானுமதி. இவர் யாருக்குமே அஞ்சாதவர், எதற்காகவும் தன்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் 50 களின் இறுதியில் பானுமதி தன்னுடைய பரணி பிக்சர்ஸ் சார்பில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளையும் தொடங்கி இருந்தார். பட வேலைகள் சென்று கொண்டிருக்கும்போது தான் எம்ஜிஆர் நாடோடி மன்னன் என்ற படத்தை எடுக்க இருக்கிறார் என்ற தகவல் பானுமதிக்கு தெரிய வந்தது. ஆனால், எம்ஜிஆரின் கதையும் பானுமதியும் கதையும் ஒன்று. இதைக் கேட்டு பானுமதி அதிர்ச்சி அடைந்து விட்டார். மேலும், 1894 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் படமாக வந்த கதை. அதற்கு பிறகு 1952ல் அதே கதையை அதே பேரில் எடுத்திருந்தார்கள்.

அந்தப் படத்தின் கதையை தழுவி தான் பானுமதி தன்னுடைய படத்தை எடுக்க திட்டமிட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அதே கதையை தான் எம்ஜிஆர் நாடோடிகள் மன்னனாக எடுக்க இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பானுமதி எம்ஜிஆரை நேரில் சந்தித்து, நான் எடுக்கும் அதே கதையைத்தான் நீங்களும் எடுக்கிறீர்கள். நாங்கள் பல மாதங்கள் முன்பே படவேளைகளை தொடங்கி விட்டோம். அதனால் உங்கள் படத்தை எடுக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார். ஆனால், எம்ஜிஆர் இதற்கு சம்மதிக்கவில்லை. இது எனக்கு முக்கியமான படம். நானே இயக்குகிறேன். அதனால் பின்வாங்க முடியாது.

Advertisement

அது மட்டும் இல்லாமல் ஆங்கிலப்படத்தில் நாயகன் மன்னனாக மாறும் பகுதியை மட்டும்தான் என்னுடைய படத்தில் வைக்க போகிறேன். நீங்கள் அந்த படத்தை அப்படியே இயக்குகிறீர்கள். அதனால் பிரச்சனை இல்லை என்று கூறுகிறார். பிறகு பானுமதி தீவிரமாக யோசித்து தங்களது படத்தை கைவிட்டார். அதற்குப் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் திருப்பம் நடந்திருக்கிறது. அதாவது, நாடோடி மன்னனில் எம்ஜிஆர் பானுமதியை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். பானுமதிக்கு நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியம். ஆனால், போகப் போக நிலைமை தான் மாறியது. இந்த படத்தை எம்ஜிஆர் இயக்கினாலும் கே சுப்பிரமணியம் மேற்பார்வையில் தான் படபிடிப்பு நடந்தது.

Advertisement

ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் அனைத்து பொறுப்பையும் அவரே கையில் எடுத்துக் கொண்டார். அதற்கு பிறகு நொடிக்கு நொடிக்கு மாற்றங்கள் நிகழ்ந்தது. சொல்வது ஒன்றும், எடுப்பது ஒன்றாகவும் இருந்தது. ஒரு காட்சிக்கு பல டேக்குகள் வாங்கி இருந்தார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பானுமதி மிஸ்டர் ராமச்சந்திரனிடம் இது எனக்கு ஒத்து வராது என்று குட்பாய் சொல்லி விலகி விட்டார். இதனால் அவர் இடைவேளையில் இறந்து போவது போல எம்ஜிஆர் காட்சியை மாற்றினார். மேலும், படத்தில் நடித்ததற்கான காசோலையை பானுமதி எம்ஜிஆரின் மனைவியிடம் திருப்பி அனுப்பி, உங்கள் கணவரின் பணத்தை ஏற்றுக் கொள்வதாக இல்லை என்று கூறியிருக்கிறார்.

இப்படி இவர்களுடைய மோதல் நீண்டு கொண்டே சென்றது. ஒரு வழியாக பல பிரச்சினைகளுக்கு பிறகு இந்த படம் வெளியானது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அது மட்டுமில்லாமல் எம்ஜிஆர் திரை உலகில் மன்னனாக ஆக்கியது இந்த படம் தான். இந்த சண்டைக்கு பிறகு பானுமதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார்கள். ஆனால், 1963ஆம் ஆண்டு காஞ்சித்தலைவன் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இப்படி தமிழ் திரை உலகில் எம் ஜி ராமச்சந்திரனை எதிர்த்து முணுமுணுக்கவே பயந்த காலத்தில் அவர் பெயர் சொல்லி அழைத்து அவர் எதிரே நின்று எதிர்த்து பேசியவர் பானுமதி தான். அவருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகையும் தோன்றவில்லை.

Advertisement