தமிழ் சினிமா உலகில் தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் எப்போதும் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் சினிமா துறையில் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இவருடைய வித்தியாசமான படைப்புகளில் வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

இந்த படத்திற்கு பல விருதுகள் கூட குவிந்தது. கந்த ஆண்டு நடைபெற்ற 67 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு சிறந்த சவுண்ட் எஃபெக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான தேசிய விருது கிடைத்தது. அதே போல சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்தாண்டு இருவருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் இரவின் நிழல் என்ற சிங்கிள் ஷாட் படத்தை எடுத்தார்.

Advertisement

இந்த படத்திலும் இவரது முயற்சிக்கு பெருத்த வரவேற்பு கிடைத்து இருந்தது. பார்த்திபனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மீது எந்த அளவிற்கு மரியாதை இருக்கிறது என்பதை அவர் பல முறை நிரூபித்து இருக்கிறார். அதிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விருது விழா ஒன்றில் பார்த்திபன், இளையராஜாவிடம் வயலினை கொடுத்து வாசிக்க கேட்ட போது ‘உனக்கு மியூசிக்க பத்தி தெரியுமா’ என்று இளையராஜா கேட்ட வீடியோவும் வைரலானது.

இப்படி ஒரு நிலையில் பார்த்திபனின் முதல் படமான புதிய பாதை படத்திற்கு முன்பு இளையராஜா இசையமைக்க மறுத்த காரணம் குறித்து பேசி இருக்கிறார் பார்த்திபன். இதுகுறித்து பேசிய அவர் ‘ நான் பாக்கியராஜ் ராஜ் சாரிடம் உதவி இயக்குனராக இருந்தபோது அவரிடம் நான் படம் இயக்கப்போவது பற்றி கூறியிருந்தேன். அப்போது நானே அந்த படத்திற்கு இசையமைக்கிறேன் என்று அவர் சொன்னார். ஆனால் எனக்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக அவரிடம் கூறியதற்கு அவரும் சரி என்று சொல்லிவிட்டார்.

Advertisement

பின்னர் இளையராஜாவை பார்க்க சென்று அவரது காலில் விழுந்து வணங்கி என்னுடைய முதல் படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவரும் வெளியே போங்க, கெட் அவுட், பாக்யராஜ் இசை அமைப்பாளரா ஆகிட்டார் இல்ல நீயும் போய் ஆர்மோனி பெட்டிய வாங்கி வாசி’ என்று கூறிவிட்டார். அப்போதும் நான் அவரது காலையில் விழுந்து இல்ல சார் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று கெஞ்சினேன்.

Advertisement

அப்போதும் அவர் சம்மதிக்கவே இல்லை. அதன் பின்னர் பாக்கியராஜ் சார் அந்த படத்திற்கு இசையமைத்தார். ஆனால் அந்த படம் பாதியிலேயே நின்று போனது. அதன் பின்னர் தான் புதிய பாதை படத்திற்கு இசையமைக்குமாறு மீண்டும் இளையராஜாவிடம் கேட்டேன். மேலும் பாக்யராஜ் சாருக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று கூறியும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை என்று கூறியுள்ளார் பார்த்திபன்.

பாக்கியராஜ் ஆரம்பத்தில் இயக்கிய படங்கள் அனைத்திற்க்கும் இளையராஜா தான் இசையமைத்து இருந்தார். ஆனால், இது நம்ம ஆளு படத்திற்கு பிறகு இந்த கூட்டணி அமையவில்லை. இந்த படத்திற்கு பாக்யராஜ் தான் இசையமைத்து இருந்தார். மேலும், அந்த சமயத்தில் இளையராஜா பாக்கியராஜிடம் பெரும் கோபத்தில் இருந்ததாகவும் ‘இப்போல்லாம் எல்லாரும் ஹார்மோனி பெட்டிய தொட்டுடறாங்க ‘ என்று இளையராஜா விமர்சித்ததாக கூட சில பேச்சுகளும் எழுந்தது. இதுகுறித்து பாக்கியராஜே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

Advertisement