மேகம் கொட்டட்டும் பாடலை கமல் குரலிலும் ராஜா கைய வச்சா பாடலை spb குரலிலும் கேட்டுள்ளீர்களா ? இதோ ஒரிஜினல் ஆடியோ.

0
1369
kamal
- Advertisement -

எனக்குள் ஒருவன் படத்தில் இடம்பெற்ற மேகம் கொட்டட்டும் பாடலையும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற ராஜா கைய வச்சா பாடலையும் கமல் மற்றும் எஸ் பி பி ஆகிய இருவருமே பாடி இருக்கிறார்கள். ஆனால், எனக்குள் ஒருவன் படத்தின் மேகம் கொட்டட்டும் பாடலை எஸ் பி பி குரலில் பாடிய பாடலையே தேர்வு செய்தார் கமல். ஆனால், ராஜா கைய வச்சா பாடலை தன்னுடைய குரலில் பாடியதை தான் கமல் வைத்தார்.

-விளம்பரம்-

மேகம் கொட்டட்டும் பாடலை கமல் குரலில் பாடப்பட்ட பாடலும், எஸ் பி பி குரலில் பாடப்பட்ட அண்ணாத்த ஆடுறார் பாடலின் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. ‘ராஜா கைய வச்சா’ பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. ஆனால், உண்மையில் அந்தப் பாடலுக்கு பதில் ‘அட உங்க அம்மா வா பார்த்த காலைத் தொட்டுக் கும்பிடுவேன்’ என்ற பாடல் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலில் நடிகை காந்திமதி அவர்கள் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை.

- Advertisement -

அபூர்வ சகோதரர்கள் படம்:

அதே போல் நடிகை காந்திமதி அவர்களும் நடிக்கவில்லை. கமல்ஹாசனுக்கு அம்மாவாக மனோரமா நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை என்றாலும், இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் ஒளிபரப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த பல படங்களுக்கு எஸ்பிபி இசையமைத்திருக்கிறார். அந்த பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

கமல் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் கமலஹாசன். இவர் சினிமா துறையில் பல சாதனைகளை புரிந்தவர்.

-விளம்பரம்-

கமல்ஹாசன் திரைப்பயணம்:

எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு அதை போலவே செய்வதும், சண்டைக்காட்சிகள், சாகச காட்சிகள் என எதுவுமே இருந்தாலும் டூப் போடமால் நடிப்பார். இவர் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். இவருடைய நடிப்பு திறமைக்காக இவர் வாங்காத விருதுகளே இல்லை.

கமல் நடிக்கும் படம்:

இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த படம் விக்ரம். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி இருக்கிறது


Advertisement