தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் திரௌபதி, ருத்ரதாண்டவம். இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது மோகன் ஜி தான் இயக்கி வரும் படம் பகாசூரன். இந்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார்.
பகாசூரன் படம்:
ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பகாசுரன் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி, கே ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இந்தநிலையில் இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் மோகன் தற்போது பிரபல செய்தி ஊடகத்திற்கு தான் இயக்கிய முதல் பட அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
விஜய் ஆண்டனிதான் கற்றுக்கொடுத்தார் :
அவர் கூறுகையில் “பழைய வனாரப்பேட்டை படம் சிஐக்கும் பொது எனக்கு 25 வயதுதான். விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமாவால்தான் நான் சினிமாவுக்கு வந்தேன் அவங்க தான் எனக்கு முன்மாதிரி. பாத்திமா விஜய் ஆண்டனியை திருமணம் செய்த பிறகு விஜய் ஆண்டனிதான் எனக்கு பல விஷியங்களை கற்றுக்கொடுத்தார். மற்றவர்களை போல இல்லாமல் கதை, 2 பாடல்கள் என தயார் செய்த பின்னர்தான் தயாரிப்பாளர்களையே போய் பார்ப்பேன்.
எம்.எல்.ஏ செத்துட்டாரு :
என்னுடைய பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் தலைப்பை நான் என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை நினைவில் வைத்துதான் தேர்ந்தெடுத்தேன். ஒரு முறை ஒரு எம்.ஏல்.ஏ பதவி ஏற்று செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனார். சிசி டிவியிலும் பதிவாகாத காரணத்தினால் அவரின் மரணம் குறித்து பல வதந்திகள் எழுந்தன. அந்த நேரத்தில் நான் என்னுடைய நண்பருடன் ஒரு ரோட்டுக்கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.
37 மணிநேரம் போலீஸ் ஸ்டேசனில் இருந்தேன் :
அந்த நேரத்தில் அங்கிருந்தவர்களில் இரண்டு பேருக்கு இடையே சண்டை வந்தது. இந்த சண்டையில் ஒருவர் கடையில் இருந்த கத்தியை எடுத்து குத்தி அவரை கொலை செய்து விட்டார். இப்படிப்பட்ட நிலையில் அங்கே இருந்த அனைவரையும் போலீசார் சில மணிநேரத்தில் கைது செய்த்தனர். அங்கே நானும் இருந்ததால் 37 மணிநேரம் என்னையும் கைது செய்து வண்ணாரப்பேட்டையில் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அப்படி உண்மையாக நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம்தான் “பழைய வண்ணாரப்பேட்டை” திரைப்படம்.