லவ் லெட்டர் எழுதி வீட்டில் மாட்டிக்கொண்டு செம அடி வாங்கியுள்ள சாய் பல்லவி – அதுவும் எந்த வயதில் பாருங்க.

0
422
saipallavi
- Advertisement -

லவ் லெட்டர் எழுதி பெற்றோரிடம் செமத்தியாக சாய் பல்லவி அடி வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.

-விளம்பரம்-

பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுவார்கள். அந்த அளவிற்கு தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சாய் பல்லவி. பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஷங்கர் கனவுப் படத்தில் இந்த பாலிவுட் நடிகர், வெளியான படு வெய்ட்டான அப்டேட். (படத்தின் கதை என்ன தெரியுமா ?)

ஷ்யாம் சிங்கா ராய் படம்:

இவர் தற்போது தெலுங்கு மொழி படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இந்த படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

விரத பர்வம் படம்:

இதனை அடுத்து சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விரத பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் ஆக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் சாய்பல்லவியின் துணிச்சலான நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். இதனிடையே இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டு உள்ளது.

காதல் கடிதம் குறித்து சொன்னது:

இதன் ஓடிடி ரிலீஸை ஒட்டி ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராணாவுடன் சாய்பல்லவி கலந்து கொண்டிருந்தார். அப்போது தனது பள்ளிப் பருவத்தில் காதல் கடிதம் எழுதி பெற்றோரிடம் அடி வாங்கிய சம்பவம் குறித்து சாய்பல்லவி மனம் திறந்து கூறியிருந்தார். அதில் அவர், நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது காதல் கடிதம் எழுதி இருக்கிறேன். என்னுடன் படித்த ஒரு பையனுக்கு அந்த காதல் கடிதம் எழுதியிருந்தேன். அறியாத வயதில் அந்த கடிதம் எழுதியதை பார்த்த எனது பெற்றோர் என்னை செமத்தியாக அடித்தனர்.

சாய்பல்லவி நடிக்கும் படங்கள்:

மற்றபடி வேறு யாருக்கும் கடிதம் எழுதியதில்லை என்று கூறியிருக்கிறார். தற்போது சாய்பல்லவி அவர்கள் கார்கி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் சாய்பல்லவி கமிட்டாகியிருக்கிறார். உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

Advertisement