ஷங்கர் கனவுப் படத்தில் இந்த பாலிவுட் நடிகர், வெளியான படு வெய்ட்டான அப்டேட். (படத்தின் கதை என்ன தெரியுமா ?)

0
290
shankar
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கும் புது படத்தில் ரித்திக் ரோஷன் – ராம்சரண் நடிக்க உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் என்று தான் சொல்லணும். இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவராக ஷங்கர் இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் உதவி இயக்குனராக இருந்தார். பின் ஷங்கர் அவர்கள் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
shankar

மேலும், அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ஜென்டில் மேன் படத்தின் மூலம் தான் இயக்குனராக ஷங்கர் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார். இவரின் அனைத்து படங்களுமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கிறார்கள். படத்திற்கான நல்ல கருத்து, ஹீரோவுக்கான மாஸ், இதுவரை யாரும் பாத்திராத லொகேஷன்களில் ஷூட்டிங் என அந்த பிரம்மாண்டத்திற்குள் இவை அனைத்தும் அடங்கும்.

- Advertisement -

சங்கர் இயக்கும் படம்:

இறுதியாக இவர் 2018 ஆம் ஆண்டு 2.0 என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது சங்கர் அவர்கள் ராம் சரணை வைத்து படம் இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக ‘ராம் சரண்15’ என பெயரிடப்பட்டு இருந்தது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதுகிறார். மேலும், படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பான் இந்திய படமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

ராம் சரண் -சங்கர் கூட்டணி:

இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் பணிகள் மீண்டும் துவங்க இருப்பதாக சமீபத்தில் சங்கர் அறிவித்திருந்தார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. மேலும், பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிலுவையில் இருக்கிறது.

-விளம்பரம்-

சங்கரின் கனவு படம்:

தற்போது சங்கர் அவர்கள் தெலுங்கில் ராம்சரணுடன் ஒரு படம், இந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சங்கர் இயக்கும் புது படத்தின் நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சங்கருக்கு நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்குவது என்பது கனவு. தற்போது தன்னுடைய கனவு படத்தை இயக்க சங்கர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த படம் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் என்று கூறப்படுகிறது.

சங்கரின் கனவு படத்தில் நடிக்கும் நடிகர்கள்:

இந்நிலையில் இந்த படத்தில் இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி கதாநாயகன் ராம்சரண் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு எடுத்து முடித்து விட சங்கர் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. நீருக்கடியில் எடுக்கப்படும் இந்த படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement