அவரு என் காலேஜ் மேட் தான், அதுனால நல்லா promote பண்ணுங்கன்னு சொன்னாரு – விஜய்யின் நண்பேன்டா மூமென்ட்.

0
932
Vijay

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா இருவரும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 1997 ஆம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் என்ற படத்திலும், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பிரண்ட்ஸ் என்ற படத்திலும் நடித்து இருந்தார்கள். பிரண்ட்ஸ்படத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் இவர்கள் இருவரின் படங்களிலும் ஒருவர் ஒருவரின் ரெபரன்ஸை பயன்படுத்தி தான் வருகின்றனர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட நடிகர் விஜய், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் ரெபரன்ஸை பயன்படுத்தி இருந்தார்.

அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக ஆரோக்யமான உறவு இருந்தாலும் விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் தான். அதே போல்சூர்யா முதன் முதலில் அறிமுகமான நேருக்கு நேர் படத்தில் முதலில் அஜித் தான் நடித்து இருந்தார். பின்னர் ஒரு சில பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் அஜித். அதன் பின்னர் தான் சூர்யா இந்த படத்தில் நடித்தார்.

இதையும் பாருங்க : என்ன டார்லிங் இப்படி ஜ**யோடு சுத்திட்டு இருக்க ? கேலி செய்த ரசிகருக்கு ரைசா பதிலடி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் போது, நடிகர் சூர்யாவை நன்றாக ப்ரொமோட் செய்ய சொன்னதாக பிரபல PRO நிகில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், விஜய் சாருடன் நான் ‘நேருக்கு நேர்’ படத்தில் வேலை பார்த்தேன். நான் வேலை பார்த்த போது முதன் முதலில் அந்த படம் விஜய் சார் மற்றும் அஜித் சார் என்று தான் ஆரம்பித்தது. சார் விலகி சூர்யா சார் வந்தார். இதனால் அஜித் அளவிற்கு புரமோஷனை செய்ய வேண்டி இருந்தது.

வீடியோவில் 18 : 04 நிமிடத்தில் பார்க்கவும்

அப்போது விஜய் சார். அவர் (சூர்யா) என் காலேஜ் மேட் தான் அவரை நல்லா பூஸ்ட் பண்ணுங்க, வளர்ந்து வரும் நடிகர் என்று சொன்னார் மேலும், பல விஷயங்களில் ஐடியா கொடுத்தார் என்று கூறியுள்ளார். சக நடிகர், புது முக நடிகர் என்று பாராமல், தன்னுடன் படித்த நண்பர் என்று சூர்யாவை விஜய் பார்த்துள்ள விஷயம் பலரையும் நெகிழ்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது. உண்மையில் விஜய் – சூர்யா ஒரு நல்ல ‘பிரண்ட்ஸ்’ தான்.

-விளம்பரம்-
Advertisement