இந்தியாவில் ஆண்டு தோறும் தேசிய விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்த தேசிய விருது பட்டியலில் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றது. அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படமும் அறிவிக்கப்பட்டது. அதே போல தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

விஜய்சேதுபதி ஃபகத் பாசில் சமந்தா ரம்யாகிருஷ்ணன் மிஷ்கின் மிருணாளினி என்று பலர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி முதல் முறையாக தேசிய விருது கிடைத்ததற்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தனக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் பட இயக்குனருக்கும் படக்குழுவிற்கும் நன்றி தெரிவித்து இருந்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டால் அதை வாங்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தின் பிரஸ்மீட்டின் போது பத்திரிக்கையாளர் ஒருவர், நீங்கள் தமிழ் மண் சார்ந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளீர்கள் ஒருவேளை இந்த திரைப்படம் தேசிய விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா மாடீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

வீடியோவில் 5 : 37 நிமிடத்தில் பார்க்கவும்

இதற்கு பதில் அளித்துள்ள விஜய் சேதுபதி, இது மிகவும் அட்வான்ஸான கேள்வி, நிச்சமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் கவலை படாதீர்கள். எனக்கு என் ஊரு என் மக்கள் தான். அதனால் நிச்சயம் அதை செய்ய மாட்டேன். ரயில் டிக்கெட்லேயே நம் மொழிய எடுத்துட்டாங்க அதுவே நெறய வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறது. உணர்ச்சிவசப்படுவதாலே நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார.

Advertisement
Advertisement