பிக்பாஸ்- 2 பைனலில் மோதும் போட்டியாளர்கள் இவர்கள் தான்..!

0
451
Bigg-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. 83 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் போட்டியாளர்கள் மீதமுள்ளனர். அதில் இந்த வாரம் ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது.

Aishwarya

இன்னும் 17 நாட்களே மீதமுள்ள நிலையில் போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே இருக்கின்றனர். இதனால் நிகழ்ச்சியை சில நாட்கள் நீட்டித்து விட்டனர் என்று ஏற்கனவே சில தகவல்களும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் இருந்து யார் வெளியேற போகிறார் என்ற பெரும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தற்போது இருக்கும் நிலவரபடி பார்த்தல் செமி பைனலுக்கான போட்டி மும்தாஜ் மற்றும் ரித்விகா இடையே தான் மிகவும் கடுமையாக நடைபெற்று வருகிறது. மஹத் வெளியேறிய வாரத்தில் மக்கள் ஆதரவு முழுவதும் மும்தாஜிற்கு தான் இருந்தது. ஆனால், இந்த வாரம் ரித்விகாவிற்காக டாஸ்க் செய்த மறுத்துவிட்ட மும்தாஜ் மீது ஆதரவு முழுவதும் அப்படியே திரும்பி சற்று வெறுப்பாக மாறியுள்ளது. எனவே, மும்தாஜ்- ரித்விகா போட்டியில் கண்டிப்பாக ரித்விகாவிற்கு தான் மக்கள் ஆதரவு அதிகாக உள்ளது.

bigg-boss-tamil-2-rithvika

அதே போல அடிக்கடி டெம்ப்ட் ஆகும் பாலாஜி சிறிது நாட்கள் தனது நாவை அடக்கி வைத்தார், ஆனால், சமீப காலமாக கொஞ்சம் புரம் பேசி வரும் பாலாஜி மீது மக்களின் கவனம் அவ்வளவாக திரும்ப வில்லை. அதே போல தான் புதிய உதயமான விஜயலக்ஷ்மியும், என்னதான் ஐஸ்வர்யா, மும்தாஜை எதிர்த்து இவர் குரல் எழுப்பி வந்தாலும் ஒரு சில இடங்களில் இவரது ஓவர் ஆக்ட்டிங் தான் தெரிகிறது.

இதில் ஆரம்பம் முதலே மிகவும் கவனமாக விளையாடி வருவது சென்ராயன் தான். என்னதான் அவர் வெகுளி, ஒன்றும் தெரியாது என்று குறிவந்தாலும் அவர் ஆரம்பம் முதலே ஒரே மாதிரி தான் இருந்து வருகிறார். அதனால் இவர் இறுதி சுற்றிற்கு போகும் வாய்ப்பு மிகவும் அதிகம். ரித்விகா, சென்ராயன் இவர்களுக்கிடையில் ஜனனி அல்லது யாஷிகாவிற்கு தான் கடும் போட்டி நிலவ அதிக வாய்ப்புள்ளது.

mumtaj

sendrayan

யாஷிகா டாஸ்க் செய்வதில் கில்லாடியாக இருந்து வருகிறார், அதே போல ஜனனி ஆரம்பம் முதலே மிகவும் சேப்பாக விளையாடி வருகிறார். எனவே, 4 ஆம் பைனலிஸ்ட்காக தான் மிகவும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஆனால், இறுதி டைட்டில் ரித்விகாவிற்கா அல்லது சென்ராயானிர்கா என்பது தான் அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது.