தனி ஒருவன் 2..! ஹீரோயின், வில்லன், இசையமைப்பாளர் இவரா..! அதிரடி அப்டேட்.!

0
432
Thani-Oruvan

தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மோகன் ராஜா. ஜெயம் படத்திற்கு பின்னர் இவர் எடுத்த படங்களும் வேற்று மொழி படத்தின் ரீ-மேக்காக தான் இருந்து வந்தது. ஆனால், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “தனி ஒருவன் ” படம் இவரது சொந்த கதையாக இருந்தது.

jayam ravi

ஜெயம் ரவி , நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் ஹிட் அடைந்தது. இயக்குனர் மோகன் ராஜா, ஜெயம் ரவி, அரவிந்த் சாமி உள்ளிட்டோருக்கு இந்த படம் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.

இந்நிலையில் “தனி ஒருவன்” படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் மோகன் ராஜா மீண்டும் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டாம் பாகத்திலும் நடிகர் ஜெயம் ரவி தான் காதநாயாகனக நடிக்க உள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு மூலம் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் சில தகவல் கிசு கிசுக்கப்படுகிறது.

samantha

அதே போல “தனி ஒருவன்” படத்தின் வில்லனாக நடித்திருந்த அரவிந்த் சாமி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் “தனி ஒருவன்” படத்தில் இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். அதில் ஒருவர் ஹீரோ மற்றொருவர் வில்லன் என்ற சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூரவ தகவல் இன்னும் வெளியாகவில்லை.