இந்த வாரம் சிறைக்கு அனுப்பபட்டது இவர் தான்.! வெளியான செம அப்டேட்.!

0
8932
mugen
- Advertisement -

கடந்த சில தினங்களாக காதலும் கடலையுமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவின் என்ட்ரிக்கு பின்னர் தலைகீழாக மாறிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சிறப்பு விருந்தினராகச் சென்று உள்ள வனிதா தான் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நாசுக்காக சண்டையை கிளப்பி விட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நடந்து வருகிறது.

-விளம்பரம்-

இந்த வாரம் முழுவதும் சண்டையும் சர்ச்சையுமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வாரம் கஸ்தூரி சிறைக்கு அனுப்பபட்டதாக ஒரு நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அது அடுத்த ப்ரோமோவில் கூட ஒளிபரப்பபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : முகெனையடுத்து லாஸ்லியா பற்றி அபியிடம் கோள்மூட்டும் வனிதா.! டெலீட் செய்யப்பட்ட வீடியோ இதோ.! 

- Advertisement -

கஸ்தூரி கடந்த வாரம் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். ஆனால், எப்படி அதற்குள்ளாகவே சிறைக்கு அனுப்பப்பட்டார் என்ற கேள்வியும் எழலாம். ஒருவேளை இந்த வாரம் டாஸ்க்கை யார் சரியாக செய்யவில்லை என்ற பஞ்சாயத்தில் அனைவரும் கஸ்தூரயின் பெயரை கூறி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல கஸ்தூரி சர்ச்சைக்கும் கொஞ்சம் சளைக்காத ஒரு நபர் தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப் போகிறார் என்று சொன்னதும் இவர் வனிதாவை விட சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவரை மற்ற போட்டியாளர்கள் ஒரு காமெடி பீஸை போல தான் பார்த்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement