அப்பா வயது முதல்வருடன் திருமணம் செய்து கொண்டு குழந்தைக்கு தாயான குட்டி ராதிகா – யாரென்று தெரியாது என்று சொன்ன முன்னாள் முதல்வர்.

0
6104
- Advertisement -

தமிழில் 2003 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளிவந்த இயற்கை படத்தில் நடித்தவர் ராதிகா குமாரசாமி. இவர் தமிழ் படத்தில் நடித்தால் குட்டி ராதிகா என்று அழைக்கப்பட்டார். 1986 ஆம் கர்நாடகா மாநிலம் மங்களுரில் பிறந்த இவர் தனது 13வது வயதிலேயே 2002 இல் நிணங்கி என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆக அதே ஆண்டில் 5 படங்களில் இவர்க்கு வாய்ப்பு கிடைத்தது .பின்னர் ரத்தன் குமார் என்ற நபர் தனக்கும் ராதிகாவிற்கும் 2000 இல் திருமணம் நடந்ததாகவும் தற்போது ராதிகா நடிகையாக இருப்பதால் அவரது தந்தை தேவராஜ் ராதிகாவிற்கு திருமணம் நடந்ததை மறைப்பதாகவும் வழக்கு பதிவு செய்தார்.

-விளம்பரம்-

இதனால் ராதிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டது பின்னர் 2002 இல் ரத்தன் குமார் மாரடைப்பால் காலமானார் என்று செய்திகள் வந்தது. அதற்கு பிறகு ராதிகா கன்னடம், மலையாளம் ,தமிழ் என பல படங்களில் நடித்துவந்தார். இவர் தமிழில் மட்டும் 5 படங்களில் நடித்தார். 2008 வரை படங்களில் நடித்து வந்த ராதிகா அதன் பின்னர் 2 ஆண்டுகள் என்ன ஆனார் என்று தெரியவில்லை பின்னர் திடீர் என்று 2010 இல் தமக்கும் கன்னட முதலமைச்சர் குமாரசாமிக்கும் 2006 இல் திருமணமாகிவிடத்தாகவும் தங்களுக்கு ஷமிகா என்ற ஒரு பெண் குழந்தயும் உள்ளது என்று கூறி பெரும் சர்ச்சையை கிளம்பினார் குட்டி ராதிகா.

- Advertisement -

மேலும், திருமணத்திற்கு பின்னர் குமாரசாமி குடும்பத்தாருடன் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக தான் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் கூறி இருந்தார் குட்டி ராதிகா. நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013 இல் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இப்படி ஒரு நிலையில் குட்டி ராதிகா தனக்கு யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளார் குமாரசாமி. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா நீலகெரே கிராமத்தில் குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழாவில் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமி கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் சிலர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான யுவராஜ், நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூ.1½ கோடி வழங்கிய விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது குமாரசாமி, நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்று எனக்கு தெரியாது என கூறினார். குட்டி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் தற்போது குட்டி ராதிகா யாரென்றே தெரியாது என்று குமாரசாமி கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement