இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’அடுத்த பொங்கல் பண்டிகை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்துடன் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஸ்வசம் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது.

Advertisement

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மூலம் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் ‘தூக்குதுரை’ என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், உண்மையில் தூக்குத்தூரை என்பது யார்? அவரது வரலாறு என்ன என்பது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் தங்கள் அரண்மனையின் பின்புறம் ஒரு கோவிலை கட்டி வணங்கி வந்தனர்.அந்த கோவிலில் முறுக்கு மீசை, தலையில் முண்டாசு என கம்பீரமாக உள்ளது தூக்குதுறையின் சிலை.

Advertisement

Advertisement

தூக்குதுரை என்பது சிங்கம்பட்டியை ஆண்ட 24 ஆம் ஜமினாவார். இவர் சிறை பிடிக்கப்பட்ட தனது நண்பனை காப்பாற்ற சிறை காவலரை கோலி செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனையை ஏற்றவர் தான் இந்த தூக்கு துறை. இவரது தியாகத்தை பாராட்டி இவரை கடவுளாக வணங்கி வருகின்றனர்.

Advertisement